தாக்குதல் நடத்த வாய்ப்பிருக்கு உஷாரா இருங்க…
அரசியல் கட்சியினரிலேயே எல்லாத்தையும் ஃபிராங்கா பேசுவதில் முக்கியமானவர் நிதின் கட்கரி, தனது சொந்த கட்சியினர் தப்பு செய்தாலும் அதனை சுட்டிக்காட்டுவதில் மிகவும் வல்லவராக நிதின்கட்கரி உள்ளார். இவர் கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.அதில் மற்ற எல்லா துறைகளைப்போல மின்சார சார்ஜ் நிலையங்களும் சைபர் தாக்குதலுக்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளதாக வெளிப்படையாக பேசினார். இதுகுறித்து Indian Computer Emergency Response Team கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். எந்த மாதிரியான தாக்குதலுக்கு வாய்ப்புள்ளது என்ற விவரத்தை மத்திய அரசு கணித்துள்ளதாகவும் 2018ம் ஆண்டு சைபர் தாக்குதல்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 8 ஆயிரத்து 456 ஆக இருந்ததாகவும்,2022-ல் இந்த எண்ணிக்கை 13 லட்சத்து91 ஆயிரத்து 457 ஆக உயர்ந்துள்ளதாகவும் நிதின்கட்கரி கூறியுள்ளார். மற்றொரு கேள்விக்கு பதில் அளித்துள்ள நிதின்கட்கரி,வாகனங்களில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்றவர்களிடம் இருந்து 147 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும்.அது பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் hit and run சட்டத்தில் அண்மையில் மாற்றம் செய்யப்பட்டதால் இழப்பீட்டுத் தொகையாக இனி பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வரை வாங்கித்தர முடியும் என்றார். மேலும் நடப்பு நிதியாண்டில் மட்டும் 12 ஆயிரத்து 200 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாக நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் 21 ஆயிரத்து 864 கோடி ரூபாய் மதிப்புள்ள 19 நெடுஞ்சாலை திட்டங்கள் கிடப்பில் கிடப்பதாகவும் தெரிவித்துள்ளார்.