உஷார்!!!! விலை ஏறப் போகிறது!!!!
இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுக்கி நிறுவனம் தனது கார்களின் விலையை வரும் ஆண்டு ஜனவரி முதல் உயர்த்த திட்டமிட்டுள்ளன உற்பத்தி செலவு கட்டுக்கு அடங்காமல் செல்வதால் திகைத்து நிற்கும் கார் உற்பத்தி நிறுவனங்கள் வேறு வழியின்றி அதனை வாடிக்கையாளர்கள் தலையில் இறக்கி விடுகின்றனர். அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்துக்கு பிறகு வரும் பல்வேறு கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு இந்த விலையேற்றத்தை மாருதி சுசுக்கி நிறுவனம் உயர்த்த திட்டமிட்டுள்ளது. முடிந்த வரை வாடிக்கையாளர்கள் பாதிக்காத வகையில்தான் இந்த விலையேற்றம் இருக்கும் என்று மாருதி நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட தற்போதைய உற்பத்தி செலவு மிகமிக உயர்வாக இருப்பதாக அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். காரில் இருந்து எவ்வளவு புகை வெளியேறுகிறது என கண்காணிக்கும் இயந்திரமும் வரும் ஏப்ரல் மாதம் முதல் பொருத்தப்பட உள்ளதால் விலையேற்றம் தவிர்க்க முடியாததாகிவிடுவதாகவும் அவர் தெரிவித்தார். ,எனினும் எந்த மாடல் காரின் விலை எவ்வளவு உயரும் என்ற தகவல் உடனடியாக வெளியாகவில்லை… கடந்தாண்டு நவம்பரை ஒப்பிடுகையில் மாருதி சுசுக்கி கார்களின் விற்பனை நடப்பாண்டில் கணிசமாக உயர்ந்துள்ளது, 2021-ல் 1 லட்சத்து 42 ஆயிரத்து25 கார்கள் விற்பனையாகின. ஆனால் இந்தாண்டு அது 1 லட்சத்து51 ஆயிரத்து 326 பயணிகள் வாகனங்களை விற்றுள்ளது.