ஆரம்பமே அமர்க்களம்!!!
இந்திய பங்குச்சந்தைகளில் வாரத்தின் முதல் வர்த்தக நாளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 318 புள்ளிகள் அதிகரித்து 62 ஆயிரத்து 345 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. இதேபோல் தேசிய பங்குச்சந்தையில் 84 புள்ளிகள் அதிகரித்து 18 ஆயிரத்து 398 புள்ளிகள் அதிகரித்து வர்த்தகம் நிறைவுற்றது.ரியல் எஸ்டேட் துறை, வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் வீட்டு உபயோக பொருள்,பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் நல்ல லாபத்தை பதிவு செய்தன. ஆரம்பத்தில் பெரிய மாற்றங்கள் இல்லாமல் தொடங்கிய பங்குச்சந்தைகள், பின்னர் நல்ல வரவேற்பை பெற்றது.Hero MotoCorp, Tata Motors, ITC, Tech Mahindra ஆகிய நிறுவனங்கள் நல்ல லாபத்தை பதிவு செய்தன. Cipla, BPCL, Divis Labs and Grasim ஆகிய நிறுவன பங்குகள் சரிந்தன. ஆற்றல் துறை பங்குகளைத் தவிர மற்ற அனைத்து துறை பங்குகளும் லாபத்தில் முடிந்தன. சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கடந்த சனிக்கிழமை விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 715 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 45 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 78 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகிறது.கட்டிவெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு சவரன் 78 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விலையுடன் ஜிஎஸ்டி மூன்று விழுக்காடும், செய்கூலியும் சேதாரமும் கூடுதலாக சேர்க்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.கடைக்கு கடை செய்கூலி,சேதாரம் மாறுபடும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.