பென்ஸ் காருக்கு அமோக வரவேற்பு..காரணம் ஏன்னு தெரியுமா?
மெர்சிடீஸ் பென்ஸ் கார் நிறுவனம் உலகம் முழுவதும் மிகமிக பிரபலமான சொகுசு காராக உள்ளது. இந்த கார் 2030ஆம் ஆண்டுக்குள் அனைத்து புதிய மாடல்களையும் மின்சார காராக வெளியிட திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக எல்லா அக்டோபர் மாத கடைசி புதன்கிழமைகளையும் தற்சார்பு நாளாக அறிவித்துள்ளது. இந்த நாளில் மின்சார கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட இந்த நாளில் பென்ஸ் கார்களை வாங்கினால் சாலை வரியில் 50%தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இந்த வரி சலுகை என்பது அசாம், ஜார்க்கண்ட், கேரளா,தெலங்கானா, ஹரியானா, நொய்டா,குஜராத் மற்றும் மத்தியபிரதேசத்தில் மட்டுமே கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. EQB, EQE 500 SUV,EQS 580 luxury sedan ஆகிய ரக கார்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த வகை கார்கள் இந்தியாவில் 5% முதல் 9 மாதங்களில் விற்கப்பட்டுள்ளன. கடந்தாண்டை விட இந்தாண்டு இந்த வகை கார்கள் 11%அதிகம் விற்கப்பட்டுள்ளன. GLS, S-Class, S-Class Maybach, GLS, Maybach, AMGs,EQS உள்ளிட்ட உயர் ரக கார்களை பென்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.