பென்ஸ் கார் விற்பனை அமோகம்..
ஜெர்மனியை பூர்விகமாக கொண்ட சொகுசு கார் நிறுவனமான மெர்சிடீஸ் பென்ஸ், இந்தியாவில், 2023-24 காலகட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக கார்களை விற்றுத் தள்ளியுள்ளது. குறிப்பிட்ட இந்த காலகட்டத்தில் 18,123 கார்களை அந்நிறுவனம் விற்றுள்ளது. இது கடந்தாண்டை விட 10 விழுக்காடு அதிகமாகும். பென்ஸ் நிறுவனத்தின் மீதான இந்தியர்களின் நம்பிக்கை அதிகரித்து உள்ளதாக அந்நிறுவனத்தின் இந்தியாவுக்கான சிஇஓ சந்தோஷ் ஐயர் தெரிவித்துள்ளார்.
2024 ஜனவரி முதல் மார்ச் வரை மட்டும் அந்நிறுவனம் இந்தியாவில் 5412 கார்களை விற்றுள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் அந்நிறுவனம் 4697 கார்களை விற்றிருந்தது. இந்தாண்டில் மட்டும் இந்தியாவில் புதிதாக 9 கார்களை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், அதில் 3 கார்கள் பேட்டரியில் இயங்கக்கூடியவை என்றும் அவர் தெரிவித்தார்.
புதுடெல்லி மற்றும் மும்பையில் புதிதாக இரண்டு அவுட்லெட்களையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இவை இந்தமாதமே அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Mar20x என்ற பணிமனைகள் இந்தாண்டுக்குள்ளாகவே 10 நகரங்களில் திறக்கப்படும் என்றும் பென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.