Airtel Axis Partnership – டிஜிட்டல், நிதி சேவைகள் அறிவிப்பு..!!
Axis வங்கியும், Bharti Airtel தொலைத் தொடர்பு நிறுவனமும் இணைந்து, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நிதி, மற்றும் டிஜிட்டல் சலுகைகளை அறிவித்துள்ளன.
நிதிச்சலுகைகள் அறிவிப்பு:
340 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதற்காக இரண்டு நிறுவனங்களும் இணைந்து, அங்கீகரிக்கப்பட்ட உடனே கிடைக்கும் கடன் வசதிகள், கோ-பிராண்ட் கிரெடிட் அட்டைகள், மற்றும் இப்போது வாங்கு.. பின்னர் கொடு என்பன போன்ற பல்வேறு நிதிச்சலுகைகளை அறிவித்துள்ளன.
ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக Cash Back-குகளையும், சிறப்பு தள்ளுபடிகளையும், டிஜிட்டல் வவுச்சர்கள் உள்ளிட்ட பலன்களை வழங்க உள்ளதாகவும், இந்த Airtel Axis Bank Credit Card கூட்டு சேவை இன்று (08.03.2022) முதல் கிடைக்கும் என்றும், தகுதியுடைய வாடிக்கையாளர்களுக்கு Airtel Thanks App வாயிலாக இந்த Credit Card-கள் பிரத்யேகமாக கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், ஆக்சிஸ் பேங்க், ஏர்டெல்லுடைய சி-பாஸ் இயங்குதளம், ஏர்டெல் ஐக்யூ உள்ளிட்ட டிஜிட்டல் சேவைகளை இதன் மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால், ஏர்டெல்லின் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்தவும், குரல், செய்தி காட்சிகள், அழைப்புகளை மறைத்தல் உள்ளிட்டவற்றை மேம்படுத்தும்.
ஏர்டெல் சிஇஓ கருத்து:
ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த டிஜிட்டல் சேவைகளை வழங்கும் முயற்சியாக வலிமையான நிதி சேவைகளை உருவாக்கி வருவதாகவும், இதற்காக ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்ததில் பெரிதும் மகிழ்ச்சியடைவதாகவும், பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான கோபால் விட்டல் கூறியுள்ளார்.
ஆக்சிஸ்சிஇஓ கருத்து:
ஆக்சிஸ் வங்கியின் பங்குதாரர்களின் மதிப்பை அதிகரிக்க தொடர்ந்து முயற்சி செய்கிறோம். இதுபோன்ற கூட்டுக் கடன், டிஜிட்டல் நிதிச்சலுகைகள் வாடிக்கையாளர்களை விரிவுப்படுத்தும் என ஆக்சிஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான அமிதாப் சவுத்ரி தெரிவித்துள்ளார்.