AIRTEL கட்டணம் மீண்டும் உயர்வு – வாடிக்கையாளர்கள் Shock..!!
இந்தியாவின் 2-வது மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் இந்த ஆண்டில் மீண்டும் ஒரு கட்டண உயர்வை அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.
வர்த்தகப் போட்டிகள் காரணமாக டெலிகாம் நிறுவனங்கள் தொடர்ந்து கட்டணத்தை அதிகரித்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக ஏர்டெல் நிறுவனமும் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டு வருகிறது.
பார்தி ஏர்டெல் நிறுவனம் திட்டம்:
கூகுளில் முதலீடு, கட்டண உயர்வு ஆகியவற்றால் பார்தி ஏர்டெல் தனது டிசம்பர் மாத காலாண்டு முடிவில் சிறப்பான காலாண்டு முடிவுகளை வெளிட்டு, தனது நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் எதிர்ப்பார்ப்புகளை நிவர்த்தி செய்துள்ளது. இந்நிலையில்தான், அந்நிறுவனம், கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளது.
அடுத்த நான்கு மாதங்களுக்குள் கட்டணம் உயர்த்ப்படாவிட்டாலும், நிச்சயம் 2022-ம் ஆண்டில் உயர்வு இருக்கும் என்று தெரிவித்துள்ளது. பார்தி ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய 200 ரூபாய் என்ற ARPU அளவீட்டை எட்டும் விதமாக இந்த ஆண்டிலேயே கட்டணத்தை உயர்த்தி அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு டெலிகாம் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடமிருந்து சராசரியாக பெறுகின்ற வருமானத்தின் அளவீடு ARPU என்று அழைக்கப்படுகிறது. டிசம்பர் மாத காலாண்டு முடிவின்படி, ஏர்டெல் நிறுவனத்தின் ARPU அளவு 163 ரூபாயாக உள்ளது. இதை 2022-ம் ஆண்டு இறுதிக்குள் 200 ரூபாயாக உயர்த்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டிலேயே கட்டணத்தை உயர்த்தி அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.