ஏற்றுமதியில் இந்தியாவுக்கு பெரிய அடி..
இந்தியாவில் இருந்து பல்வேறு பொருட்களின் ஏற்றுமதி விகிதம் 16% குறைந்திருக்கிறது. இது ஜூலை மாதத்தில் மட்டும் 32.25 பில்லியன் அமெரிக்க டாலர்களாக சரிந்துள்ளது.சீனா மற்றும் அமெரிக்காவில் நிலவும் மந்தநிலையும் இதற்கு முக்கிய காரணிகளாக கூறப்படுகிறது. பெட்ரோலியம், நிலக்கரி,வெள்ளி உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதி கணிசமாக குறைந்துவிட்டன. பெட்ரோலிய துறை விலை வீழ்ச்சியும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது வர்த்தக பற்றாக்குறை அளவு என்பது 20.13 பில்லியன் அமெரிக்க டாலர்களாக ஜூன் மாதத்தில் இருந்தது. இது ஜூலையில் 20.67 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது.முன்னதாக 21 பில்லியன் அமெரிக்க டாலர்களாக வர்த்தக பற்றாக்குறை இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்திருந்த நிலையில் கிட்டத்தட்ட அதே அளவுக்கு பற்றாக்குறை வளர்ந்திருக்கிறது.எனினும் கடந்தாண்டு இருந்த வர்த்தக பற்றாக்குறையான 25.43 பில்லியன் அமெரிக்க டாலர்களில் இருந்து 20.67 பில்லியன் அமெரிக்க டாலர்களாக வர்த்தக பற்றாக்குறை சற்று குறைந்திருக்கிது . பல நாடுகளில் வர்தத்க ஏற்றுமதி இறக்குமதி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள நிபுணர்கள்,இந்தியாவில் இருந்து மின்னணு சாதன பொருட்கள்,இரும்பு தாது,மருந்து மற்றும் மருந்து உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி கணிசமாக உயர்ந்திருப்பதாகவும் கூறுகின்றனர்.