பங்குச்சந்தையில் மிகப்பெரிய ஏற்றம்..
இந்திய பங்குச்சந்தைகளில் நவம்பர் 15 ஆம் தேதி மிகப்பெரிய ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை
குறியீட்டு எண் சென்செக்ஸ் 742 புள்ளிகள் உயர்ந்து 65,675 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 232 புள்ளிகள் உயர்ந்து 19,675புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. அமெரிக்க பணவீக்க தரவுகள்,அமெரிக்க பெடரல் ரிசர்வ்வின் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று கூறிய தகவல்களால் இந்திய சந்தைகளில் முதலீடுகள் அதிகரித்துள்ளன. கடந்த அக்டோபர் 19ஆம் தேதிக்கு பிறகு, பங்குச்சந்தைகளில் மிகப்பெரிய ஏற்றம் பதிவாகியிருக்கிறது. அனைத்துத்துறை பங்குகளும் பச்சை நிறத்தில் முடிந்தன.Eicher Motors, Tech Mahindra, Hindalco Industries, Tata Motors,InfosyS நிறுவன பங்குகள் நிஃப்டியில் லாபத்தை பதிவு செய்தன. Bajaj Finance, Power Grid Corporation, IndusInd Bank பங்குகள் சரிவை கண்டன. ஆட்டோமொபைல்,உலோகம்,தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் 1 முதல் 3 விழுக்காடு வரை உயர்ந்து முடிந்தன. Network 18 Media, NESCO, Welspun India, Phoenix Mills, Motilal Oswal, Oberoi Realty, Bikaji Foods, Eicher Motors, Suzlon Energy,Narayana Hrudayalayaஉள்ளிட்ட 350 நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து 45160 ரூபாயாக இருக்கிறது. ஒரு கிராம் தங்கம் 30 ரூபாய் விலை உயர்ந்து 5645ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் 70 காசுகள் உயர்ந்து 77 ரூபாய் 70 காசுகளுக்கு விற்கப்படுகிறது. கட்டி வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு ஆயிரத்து 700 ரூபாய் அதிகரித்து 77ஆயிரத்து 700 ரூபாயாக உள்ளது. இந்த விலைகளுடன் 3 விழுக்காடு நிலையான சரக்கு மற்றும் சேவை வரியும், செய்கூலி, சேதாரமும் சேர்க்கப்படவேண்டும், ஆனால் செய்கூலி,சேதாரம் என்பது கடைக்கு கடை மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.