PLIயில் வருவாய் சலுகை கேட்கும் பெரிய நிறுவனங்கள்..
அதிநவீன வேதியியல் செல் துறை சார்பாக உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை பெற 7 பேர் விண்ணப்பித்து இருப்பதாக மத்திய கனரக ஆலைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த துறைக்கு அமோக வரவேற்பு இருப்பதாக குறிப்பிட்ட அந்த அமைச்சகம், அமர ராஜா,ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜேஎஸ்டபிள்யு நியூ எனர்ஜி, லூக்காஸ் டிவிஎஸ் , அக்மீ ,அன்வி உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த ஊக்கத்தொகை பெற முயற்சித்து வருகின்றன. மொத்தமாக 70 ஜிகாவாட் உற்பத்தி துறை சார்ந்துள்ளவையாகும். இந்த திட்டத்தின்படி இந்தியாவில் அதிநவீன செல்களை உருவாக்க வேண்டும், 10 ஜிகாவாட் உற்பத்தி செய்ய 3620 கோடி ரூபாய் மத்திய அமைச்சகம் இசைவு தெரிவித்தது. குறிப்பிட்ட இந்த வகை உயர் ரக தொழில்நுட்ப பேட்டறிகள் சேமிப்பு வருங்காலத்திற்காக பெரிதும் உதவும் என்று கூறப்படுகிறது.குறிப்பாக மின்சார பைக்குள், வாடிக்கையாளர்கள் மின்சாதன பொருட்களுக்கு இந்த வகை செல்கள்தான் முக்கியம். 2021 ஆம் ஆண்டு மத்திய அமைச்சரவை தேசிய ஏசிசி பேட்டரி ஸ்டோரேஜுக்கான தொழில்நுட்பத்துக்கு ஒப்புதல் வாங்கப்பட்டது. இதற்காக 18,100 கோடி ரூபாய் ஒதுக்க திட்டமிடப்பட்டது. இது தொடர்பாக 2022-ல் ஒப்பந்தம் கையெழுத்தாகி 3 நிறுவனங்களுக்கு அவை ஒதுக்கப்பட்டன.
2030 ம் ஆண்டுக்குள் 220 ஜிகாவாட் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 50 விழுக்காடு அதிகமாகும். இந்தியாவில் உள்நாட்டிலேயே பேட்டரி துறைகளை வலுப்படுத்தவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.