இந்தியாவை குறி வைக்கும் பெரிய நிறுவனங்கள்…
மின்னணு சாதனங்கள் ஏற்றுமதி கேந்திரமாக இந்தியா உருவெடுக்க பல்வேறு கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை தற்போது உள்ளதைவிட அதிகப்படுத்த தீவிரம் காட்டி வருவதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கூறியுள்ளார். உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்கும் நோக்கில் 2 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த இருப்பதாக கூறியுள்ளார்.லேப்டாப்கள்,சர்வர்கள்,டேப்லட்,மற்றும் மின்னணு சாதனங்கள் இந்த புதிய திட்டத்தில் இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது இந்திய அரசு அளித்து வரும் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை திட்டத்தில் பயனடைய ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் முன்வருவதாக அமைச்சர் கூறியுள்ளார். டெல்,எச்.பி.லெனோவோ ஆகிய நிறுவனங்கள் தங்கள் வன்பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளன. சிப் உற்பத்தி மற்றும் சிப்பேக்கேஜ் செய்யும் ஆலைகளை நிறுவ பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக கூறியுள்ளார்.
அனில் அகர்வால் 19 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய புதிய சிப் உற்பத்தி ஆலைக்கான பணிகளை செய்து வருவதாகவும் இணையமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.