பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி..!!!
செப்டம்பர் 28ஆம் தேதி இந்திய பங்குச்சந்தைகளில் பெரிய சரிவு காணப்பட்டது.முதலீட்டாளர்களுக்கு பங்குச்சந்தைகளில் 2.40 லட்சம் கோடி ரூபாய் இழப்பு நேரிட்டுள்ளது. உலகளவில் நிலவும் மோசமான பொருளாதார சூழலும், கச்சா எண்ணெய் விலை உயர்வும்தான் இந்த நிலைக்கு காரணமாக கூறப்படுகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 610புள்ளிகள் சரிந்து 65,508புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தன.தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 192 புள்ளிகள் சரிந்து 19,523 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. இத்தனை சரிவிலும் 1,524 நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன.2007 பங்குகள் பெரிய சரிவை கண்டன.136 பங்குகளில் பெரிய மாற்றம் ஏதும் இல்லாமல் வர்த்தகம் நிறைவுற்றது.அமெரிக்க உள்நாட்டு உற்பத்தி மற்றும் பெடரல் ரிசர்வின் தலைவரின் பேச்சுகள் மிக முக்கியமாக கவனிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்க பெடரல் ரிசர்வின் அதிக வட்டி மற்றும் அமெரிக்க பத்திரங்களின் நிலையை முதலீட்டாளர்கள் கவனித்து வருகின்றனர். இதன் காரணமாகவே முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்து வருகின்றனர். நிஃப்டி மீடியா,நிப்டி தகவல் தொழில்நுட்பம்,ஆட்டோமொபைல், வாடிக்காயாளர்கள் அதிகம் வாங்கும் பொருட்கள் துறைகளும் தலா 1 விழுக்காடு அளவுக்கு சரிந்தன.எல் அண்ட் டி நிறுவன பங்குகள் 2%வரை உயர்ந்தன.Bharti Airtel, ONGC,Coal India ஆகிய நிறுவன பங்குகள் விலை உயர்ந்து முடிந்தன. டெக் மகேந்திரா நிறுவன பங்குகள் 4% வீழ்ச்சியை சந்தித்தன.LTIMindtree, M&M ஆகிய நிறுவன பங்குகள் பெரிய சரிவை சந்தித்தன. பங்குச்சந்தைகளை போலவே தங்கச்சந்தையும் சரிந்தது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 560 ரூபாய் வீழ்ச்சியடைந்தது. ஒரு கிராம் தங்கம் 70 ரூபாய் குறைந்து 5ஆயிரத்து 410 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் தங்கம் 43280 ரூபாயாகஉள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 76 ரூபாய் 50 காசுகளாக விற்கப்படுகிறது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 500ரூபாய் குறைந்து 76ஆயிரத்து 500ரூபாயாக உள்ளது. இந்த விலைகளுடன் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மற்றும் செய்கூலி சேதாரம் சேர்த்தால்தான் இறுதி விலை தெரியவரும். ஆனால் செய்கூலி சேதாரம் கடைக்கு கடை மாறுபடும் என்பதால் உறுதியான விலை இங்கே பதியவில்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.