பில்கேட்ஸ் சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்!!!
வடக்கு அரிசோனா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பிரபல தொழிலதிபர் பில்கேட்ஸ் உரையாற்றினார். அப்போது பேசிய பில்கேட்ஸ் ஐந்த விஷயங்களை பட்டியலிட்டார்.
1) கல்லூரி மாணவர்களாக நீங்கள் எடுக்கும் முடிவுகள் நிரந்தமானது இல்லை என்றும்,1975ஆம் ஆண்டு தாம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்கும் போது கடைசி வரை வேலை செய்யவேன் என்று நினைத்ததாக கூறினார். ஆனால் தனது நிலை மாறியுள்ளது என்று தெரிவித்தார்.
2) உதவி கேட்க தயங்க வேண்டியதில்லை என்றும் கூறியுள்ள பில்கேட்ஸ், பிரச்சனைகளை சந்திக்கும்போது அஞ்ச வேண்டாம் என்றும் ,விவரமான மக்களிடம் உதவி கேளுங்கள் என்றார்.
3) தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட இந்த காலகட்டத்தில் அனைத்து தரப்பினருக்கும் உதவி செய்யும் யுகத்தில் மக்கள் இருப்பதாக கூறியுள்ளார். காலநிலை மாற்றத்தை தடுக்கவும்,செயற்கை நுண்ணறிவு வளரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
4) மிகச்சிறந்த இணைப்புகளை கல்லூரி காலத்திலேயே உருவாக்கிக் கொள்ளுங்கள் என்றும் பில்கேட்ஸ் அறிவுறுத்தியுள்ளார்.
5) வேலையைத் தாண்டி பல்வேறு அம்சங்கள் வாழ்க்கையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேவையான நேரத்தில் பிரேக் எடுத்துக்கொள்வது நல்லது என்றும் அவர் தெரிவித்துள்ளார். பணியாளர்கள் எளிமையானவர்கள் என்றும் அவர்களுக்கு தேவைப்படும்போது அவர்களுக்கான நேரத்தை ஒதுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.