மோசடிகளை தடுக்க பயோ மெட்ரிக்..
கடந்த சனிக்கிழமை மத்திய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக போலியான இன்வாய்ஸ் மூலம் நடக்கும் மோசடிகளை தடுக்க ஆதாருடன் கூடிய பயோமெட்ரிக் முறை அமலாக இருக்கிறதாம். இது இந்தியா முழுவதும் ஒரே மாதிரி நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. உள்ளீட்டு வரிகளில் நடக்கும் மோசடிகளில் ஆதார்மூலம் எளிதாக தெரிந்துகொள்ளும் வகையில் பணிகள் நடப்பதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார். படிப்படியாகத்தான் இந்த திட்டம் அமல்படுத்தப்பட இருக்கிறது.மேலும் புதிய பயோமெட்ரிக் முறை ஜிஎஸ்டி பதிவுக்கு மிகவும் உதவும் என்றும், உள்ளீட்டு வரிகளில் சில சலுகைகளை மத்திய அரசு பரிசீலிக்கும் என்றும் தெரிகிறது. சரக்கு மற்றும் சேவை வரிகளில் உள்ளீட்டு வரி முறைகேடுகள் நடந்திருப்பதாக தகவல் வெளியிட்டிருந்த நிலையில் , தற்போது மத்திய அரசு இதில் அதீத ஆர்வம் காட்டி வருகிறது. மோசடிகளை தடுக்க பல்வேறு முறைகள் பின்பற்றப்படும் நிலையில்,ஆதார்கார்டை எந்த இடத்தில்தான் பயன்படுத்துவது என்று புரியாமல் மத்திய அரசு பல முயற்சிகளை செய்துவருகிறது.