பிரதமருக்கு BMS கடிதம்..
தனியார் தொலைதொடர்புத்துறை போட்டிகளை சமாளிக்க பிஎஸ்என்எல் இருப்பு அவசியம் என்று பாரதீய மஸ்தூர் சங்கம் என்ற அமைப்பு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது. தங்கள் இஷ்டத்துக்கு தொலைதொடர்பு நிறுவனங்கள் விலைகளை உயர்த்தி வரும் நிலையில் அரசின் நிறுவனமான பிஎஸ்என்எலுக்கு ஏன் கவனம் செலுத்தவில்லை என்ற கேள்வி எழுந்து வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனமும் 4ஜி மற்றும் 5ஜி சேவையை பயன்படுத்த வேண்டும் என்று அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 10 ஆம் தேதி அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் 3 கோடி பணியாளர்களின் கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.நாட்டு மக்களின் நலன் மற்றும் விருப்பத்துக்காக 4ஜி மற்றும் 5ஜி சேவையை கொடுக்க வேண்டும் என்றும் அதில் கோரப்பட்டுள்ளது. இந்த புதிய வசதிகள் இல்லாததால் பிஎஸ்என்எல் பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்து, அதில் பணியாளர்களின் எண்ணிக்கையும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. 3தனியார் நிறுவனங்களும் தங்கள் வருமானத்தை உயர்த்த கட்டணத்தை பொதுமக்கள் தலைகளில் சுமத்தியுள்ளனர். இந்நிலையில் இந்த தொகையை சாதாரண மக்களால் செலுத்த முடியவில்லை என்றும் அவர்கள் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக நல்ல லாபம் பார்த்து வரும் தனியார் நிறுவனங்கள், இந்த விலையேற்றத்தால் மேலும் லாபமடைவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது
விலையேற்றத்தை திரும்பப்பெற வைக்க அரசு தலையிட வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர். விலையேற்ற தனியார் நிறுவனங்களுக்கு எந்த காரணமும் இல்லையே என்று குறிப்பிட்டு பிஎஸ்என்எல் நிறுவன ஊழியர்கள் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கடிதமும் எழுதியுள்ளனர். கடந்த நிதியாண்டில் ஜியோவின் லாபம் மட்டும் 20,607 கோடி ரூபாயாக உள்ளது. இதேபோல் ஏர்டெலின் லாபம் 7,467 கோடி ரூபாயாக உள்ளது.