பணவீக்கத்துலயும் பத்திரமா பணத்த Invest பண்ணனுமா..!!
பணவீக்கம் என்பது இன்று நம்முடைய அன்றாட வாழ்க்கையை ஆட்டிப்படைக்கிற ஒரு விஷயமாக மாறி இருக்கிறது, உணவுப் பொருட்களின் விலை, காய்கறிகளின் விலை மட்டுமில்லை, கூடுதலாக போக்குவரத்துக்குப் பயன்படக்கூடிய பெட்ரோலின் விலை, LPG கேஸ் விலை என்று உச்சத்தை எட்டிக்கொண்டிருக்கும் பணவீக்க விளைவுகள் நம் கண்முன்னே தலைவிரித்தாடுகிறது. இந்த சூழலில் நம்முடைய சேமிப்புகளோ, முதலீடுகளோ பணவீக்கத்தால் பயனற்றுக் கரைந்து போய்விடக்கூடாது.
ஒரு சிறு முதலீடும் கூட அதிகளவு நன்மைகளை வழங்குவதாக, பணவீக்கத்தை வெல்லக்கூடியதாக இருக்க வேண்டும். கண்ணைக்கவரும் முதலீட்டு விளம்பரங்கள், ஏமாற்றும் அதிக வட்டி முதலீட்டுத் திட்டங்கள் என்று உங்கள் வழியெங்கும் கடை விரித்திருப்பவர்களின் வலையில் சிக்கிக் கொண்டு விட்டால், உங்கள் கதை எந்திரத்தில் சிக்கிய கரும்பைப் போலத்தான். ஆகவே முதலீடு விஷயத்தில் நீங்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
ஆனால், நேர்மையாக முதலீடுகளைப் பற்றிப் பேச வேண்டுமென்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திரங்களில் செய்யப்படும் முதலீடுகள் பாதுகாப்பானவை, அத்தகைய முதலீடுகளை நீங்கள் கண்டறிந்து முதலீடு செய்வது கடினமான வேலை. அப்படி ஒரு பத்திரம் தான் பிர்லா குழுமத்தின் ஆதரவோடு வெளியிடப்பட்டிருக்கும் “ஸ்வதந்த்ரா மைக்ரோஃபின் பிரைவேட் லிமிடெட் இன் CRISIL A+ தரச்சான்றிதழ் மதிப்பிடப்பட்ட பத்திரங்கள். இந்தப் பத்திரங்களின் முதலீட்டுக் காலம் 6 ஆண்டுகள் (72 மாதங்கள்), இது 11.47 % வட்டியை வழங்கக்கூடியது, இந்த வட்டி மாதந்தோறும் முதிர்வு காலம் வரை வழங்கப்படுகிறது, எனவே பணவீக்கத்திற்கு எதிராக சிறப்பான குறிப்பிடத்தக்க பாதுகாப்பை இந்தப் பத்திரங்கள் வழங்குகிறது.
ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம், பத்திரத்தை வாங்குபவர்களின் முதலீட்டைப் பாதுகாக்க மிகச்சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கிறது, ஆதித்ய பிர்லா குழுமத்தின் அனன்யாஸ்ரீ பிர்லா மற்றும் அவரது தந்தை குமாரமங்கலம் பிர்லா இந்த நிறுவனத்தின் மிக முக்கிய பங்குதாரர்களாக இருக்கிறார்கள், தற்போதிருக்கும் முதன்மை முதலீட்டாளர்கள் எப்போதும் 51 % பங்குகளை வைத்திருப்பவர்களாக இருக்க வேண்டும் என்கிற விதி கடைபிடிக்கப்படுகிறது,
ஸ்வதந்த்ரா மைக்ரோஃபின் நிறுவனமும் நிலுவைத் தொகை திருப்பிச் செலுத்த முன்னுரிமை அளிக்கப்படுவதை உறுதி செய்யும் கட்டுப்பாடுகளைக் கொள்கைகளாகக் கொண்டுள்ளது. நிறுவனத்தின் மொத்தக் கடனாகட்டும், பங்குகளின் விகிதங்களாகட்டும், செயல்படாத அல்லது முடங்கிய சொத்துக்களாகட்டும் கட்டுக்குள் இருக்கிறது, பணவீக்கத்தை வசதியாக முறியடிக்க மட்டுமின்றிக் கூடுதலாக லாபத்தைப் பெறவும் “ஸ்வதந்த்ரா” பத்திரங்கள் ஒரு மிகச் சிறந்த வாய்ப்பாகும்.
10 லட்சம் என்கிற முகமதிப்புக் கொண்ட முதலீட்டுக்கு ஸ்வதந்த்ரா பத்திரங்கள் என்றால் குறைந்த அளவான 1 லட்சம் முகமதிப்புக் கொண்ட பத்திரங்களில் சிறப்பானதாக கரூர் வைஷ்யா வங்கியின் பத்திரங்களைத் தேர்வு செய்யலாம், குறைந்த வட்டி விகிதங்களில், பணவீக்கத்தால் வைப்பு நிதி முதலீடுகள் எந்த லாபத்தையும் வழங்காத சூழலில் கரூர் வைஷ்யா வங்கியின் இந்தப் பத்திரங்கள் 10.33 % வட்டியை ஆண்டு தோறும் முதிர்வு காலம் வரை வழங்குகிறது.
வங்கி CRISIL தேர்ச்சி சான்று நிறுவனத்தால் A1 + மதிப்பீட்டைப் பெற்றிருக்கிறது. ஒப்பீட்டு நோக்கில் பிற பத்திரங்களைப் பார்க்கும் போது முதலீட்டாளர்களின் நலன்களை பாதுகாக்கும் வண்ணம் மிகச்சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்தது, RBI மற்றும் செபியின் கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடிக்கும் வங்கியாகவும் இருக்கிறது.
ஒருவேளை வங்கி வட்டி வழங்குவதில் தாமதம் செய்தால் முதலீட்டுத் தொகையில் 2 % வட்டியை அதிகரித்து இழப்பீடாக வழங்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது, இந்தப் பத்திரங்களின் முதிர்வு தேதி 12 ஜூன் 2029. ICRA தரமதிப்பீடு A என்பதால் நம்பகத்தன்மை கொண்ட முதலீடாக கரூர் வைஷ்யாவின் பத்திரங்கள் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்தப் பத்திரங்கள் குறித்து மேலும் விவரங்களை அறிந்து கொள்ளவும், பத்திரங்களை வாங்கவும் நீங்கள் திரு.ஜானகிராமன் அவர்களை 7305088517 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம், அல்லது வாட்சப்பில் செய்தி அனுப்பலாம்.