ஐடிஎப்சி வங்கி இணைப்பால் ஏற்றம்..
நவம்பர் 15 ஆம் தேதி இந்திய சந்தைகளில் ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் பங்குகள் ஏற்றம் கண்டன. இதன் பின்னால் முக்கிய காரணம் இருக்கிறது.அதாவது ஐடிஎப்சி லிமிட்டட் மற்றும் ஐடிஎப்சி ஃபைனான்சியல் கார்பரேஷன் ஆகிய இரண்டு நிறுவனங்களையும் ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் நிறுவனத்துடன் இணைக்க இசைவு கிடைத்திருக்கிறது. இரு நிறுவனங்கள் இணைப்புக்கு தங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்று பங்குச்சந்தைகளிடம் இருந்து கடிதமும் கிடைத்திருக்கிறது.
இந்த இரு நிறுவனங்களின் இணைப்பு தொடர்பாக இந்திய போட்டி ஆணையத்திடம் இருந்து ஒப்புதல் கடிதமும் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி கிடைத்திருக்கிறது. கடந்த ஜூலை மாதம் 3 ஆம் தேதி ஐடிஎப்சி நிறுவனத்தின் இயக்குநர்கள் கூட்டத்தில் இந்த இணைப்பு குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டது. ஈக்விட்டி வகையில், ஃபேஸ் வேல்யூ 10 ரூபாய் கணக்கில் இந்த இணைப்புக்கான ஒப்புதல் அளக்கப்பட்டு இருந்தது. செப்டம்பருடன் நிறைவுற்ற காலாண்டில் ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் லாபம் மட்டும் 35விழுக்காடு உயர்ந்திருக்கிறது. அதாவது இந்த நிறுவனத்தின் நிகர லாபம் மட்டும் 1456 கோடி ரூபாயாக இருக்கிறது.நிகர வட்டி வருமானம் மட்டும் 3950 கோடி ரூபாயாக இருக்கிறது. நிகர வட்டி மார்ஜின் தொகை கடந்த நிதியாண்டைவிட உயர்ந்து 6.32%ஆக அதிகரித்துள்ளது. இது கடந்தாண்டில் 5.83விழுக்காடாக இருந்தது.