இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம் !!!
கடந்த சில நாட்களாக ஊசலாட்டத்துடன் இருந்து வந்த இந்திய பங்குச்சந்தைகளில் புதன்கிழமை(பிப் 8ம் தேதி)குறிப்பிடத்தகுந்த ஏற்றம் காணப்பட்டது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 377.5புள்ளிகள் உயர்ந்தன.வர்த்தக நேர முடிவில் அந்த பங்குச்சந்தை 60ஆயிரத்து663 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியிலும் குறிப்பிடத்தகுந்த ஏற்றம் காணப்பட்டது. நிஃப்டி 150புள்ளிகள் உயர்ந்தது. வர்த்தக நேர முடிவில் நிஃப்டி17ஆயிரத்து871 புள்ளிகளாக இருந்தது. அமெரிக்க பெடரல் ரிசர்வின் தலைவர் ஜெரோம் பாவெல் விலைவாசி உயர்வு பற்றி பேசியதால் நம்பிக்கை அடைந்த முதலீட்டாளர்கள் அமெரிக்க சந்தைகளில் காசை கொட்டி வருகின்றனர், இதன் பிரதிபலிப்பாகவே இந்திய சந்தைகளிலும் முன்னேற்றம் காணப்பட்டது தகவல் தொழில்நுட்பம், மருந்துத்துறை மற்றும் உலோகத்துறை பங்குகளில் குறிப்பிடத்தகுந்த ஏற்றம் காணப்பட்டது அதானி குழுமத்தின் 10ல் 7 நிறுவன பங்குகள் ஏற்றத்தை கண்டுள்ளன. உலகளவில் சாதகமான சூழல் தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி எடுத்துவரும் முயற்சிகளால் இந்திய சந்தைகள் ஏற்றம் கண்டன.