பங்குச்சந்தைகளில் ஏற்றம்..
நவம்பர் 28ஆம் தேதி இந்திய பங்குச்சந்தைகளில் லேசான முன்னேற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை
குறியீட்டு எண் சென்செக்ஸ் 204 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது 66,174 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 95 புள்ளிகள் உயர்ந்து 19,900புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. Adani Enterprises, Adani Ports, Tata Motors, BPCL, Coal India நிறுவன பங்குகள் நிஃப்டியில் லாபத்தை பதிவு செய்தன. Eicher Motors, Apollo Hospitals, ICICI Bank, ITC, Cipla பங்குகள் சரிவை கண்டன. ஆற்றல், எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை பங்குகள் தலா 3%விலை உயர்ந்தன. உலோகம்,ஆட்டோமொபைல், பொதுத்துறை வங்கிகள் 1விழுக்காடு வரை ஏற்றம் கண்டன. மருந்துத்துறை பங்குகள் சரிவை சந்தித்தன. Adani Power, New India Assurance Company, HPCL, MCX India, Prism Johnson, Suven Pharma, Gujarat Pipavav, Brigade Enterprises, NMDC and IOC உள்ளிட்ட 300 நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை மாற்றமின்றி ஒரு சவரன் 46 ஆயிரத்து 240 ரூபாயாக இருக்கிறது. ஒரு கிராம் தங்கம் 5780 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராம் 81 ரூபாய் 50 காசுகளுக்கு விற்கப்படுகிறது. கட்டி வெள்ளி விலை 81ஆயிரத்து 500 ரூபாயாக உள்ளது. இந்த விலைகளுடன் 3 விழுக்காடு நிலையான சரக்கு மற்றும் சேவை வரியும், செய்கூலி, சேதாரமும் சேர்க்கப்படவேண்டும், ஆனால் செய்கூலி,சேதாரம் என்பது கடைக்கு கடை மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.