இந்திய சந்தையில் ஏற்றம்….

டிசம்பர் 22 ஆம் தேதி இந்திய சந்தைகளில் குறிப்பிடத்தகுந்த ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 241 புள்ளிகள் உயர்ந்து 71ஆயிரத்து 106 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 94 புள்ளிகள் உயர்ந்து 21 ஆயிரத்து 349 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. முதல் பாதியில் சிறப்பாக இருந்த சந்தைகள்,இரண்டாவது பாதியில் சரிந்தன.எனினும் கடைசி நேரத்தில் நடந்த வர்த்தகம் நம்பிக்கை அளித்தது.
திங்கட்கிழமை இந்திய சந்தைகள் கிறிஸ்துமஸ் காரணமாக விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமையே வர்த்தகம் சூடுபிடித்தது. Wipro, HCL Technologies, Tata Motors, Hero MotoCorp, Hindalco Industries ஆகிய நிறுவனங்கள் லாபத்தை பதிவு செய்தன. Grasim Industries, SBI Life Insurance, Bajaj Finance, HDFC Bank,ICICI Bank ஆகிய நிறுவன பங்குகள் சரிவை கண்டன. AstraZeneca Pharma, Axiscades Technologies, Balmer Lawrie, Caplin Labs, Castrol, GAIL, JB Chemicals, Kalyani Investment, NLC India, Piramal Pharma, Rane Holdings, Sangam India, Shyam Metalics, Suven Pharma, Transformers and Rectifiers India, Wipro உள்ளிட்ட நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்வில் முடிந்தன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. ஒரு கிராம் தங்கம் 35 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 5860 ரூபாயாக இருக்கிறது. ஒரு சவரன் தங்கம் 46,880 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து 81 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 300 ரூபாய் உயர்ந்து 81 ஆயிரம் ரூபாயாக விற்கப்படுகிறது. இந்த விலைகளுடன் நிலையான ஜிஎஸ்டி 3விழுக்காடும், செய்கூலி, சேதாரமும் சேர்க்கவேண்டும். இதில் செய்கூலி, சேதாரம் கடைக்கு கடை மாறுபடும் என்பதை நகை வாங்குவோர் கவனத்தில் கொள்ள வேண்டும்.