அமெரிக்கா, சீனாவுடன் போட்டி போடும் பிரிட்டன்.
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு போட்டியாக பிரிட்டன், பிரத்யேக செயற்கை நுண்ணறிவு கணினியை வடிவமைக்க பெருந்தொகையை முதலீடு செய்திருக்கிறது. அமெரிக்க மதிப்பில் 273 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இதற்காக முதலீடுசெய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு நுட்பத்தில் போட்டி போட வேண்டும் என்பதற்காக இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.பிரிஸ்டல் பல்கலைக்கழகம் இந்த புதிய சூப்பர் கம்ப்யூட்டரை வடிவமைக்க இருக்கிறது.இதற்கு இசாம்பார்ட் AIஎன்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சூப்பர் கம்ப்யூட்டர் செயல்பாட்டுக்கு வந்தால், பிரிட்டனிலேயே அதிநவீன செயற்கை நுண்ணறிவு சூப்பர் கம்ப்யூட்டராக மாறும் என்று கூறப்படுகிறது.அதாவது தற்போது நடைமுறையில் உள்ள கணினிகளைவிட 10விழுக்காடு வரை அதிவேகத்தில் தரவுகளை புராசஸ் செய்துவிடும். 5,448 GH200 Grace Hopperசூப்பர் சிப்கள் இந்த கணினியில் இடம்பெற இருக்கின்றன.இந்த சிப்கள் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டவை. Nvidia நிறுவனம் பிரத்யேகமாக இந்த புராசசர்களை தயாரித்துள்ளது.கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சூப்பர் கணினியான டானுடன் புதிய சூப்பர் கம்பியூட்டரை இணைக்கும் வகையில் HP நிறுவனம் அதற்கான பணிகளை செய்கிறது. டான் என்ற சூப்பர் கம்ப்யூட்டரை டெல் மற்றும் பிரிட்டனின் ஸ்டாக் பிசி நிறுவனங்கள் இணைந்து உருவாக்கின. சுகாதாரத்துறை,சுற்றுச்சூழல் மாடலை வடிவமைக்க இந்த சூப்பர் கம்ப்யூட்டர்களின் இணைப்பு சாத்தியப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.புதிய மருந்துகள் கண்டுபிடிப்பு மற்றும் தூய்மையான ஆற்றலை உருவாக்க இந்த புதிய சூப்பர் கம்ப்யூட்டர்கள் உதவ இருக்கின்றன. பிரிட்டனில் அடுத்தாண்டு கோடை காலத்தில் இந்த புதிய சூப்பர் கம்ப்யூட்டர்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 1 பில்லியன் பவுண்ட் அளவுக்கு செமி கண்டக்டர்கள் உற்பத்திக்கு பிரிட்டன் அரசாங்கம் திட்டங்களை தீட்டியுள்ளன. இந்த சூழலில் புதிய சூப்பர்கம்பியூட்டர் வருகை மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.