உடைந்து சிதறிய சந்தைகள்
வாரத்தின் முதல் வர்த்தக நாளில் அதிக ஏற்றத்தை காண்பதும், வாரத்தின் கடைசி வர்த்தக நாளில் பானையை உடைத்து லாபத்தை தூக்கிச் செல்வதும் பங்குச்சந்தைகளில் முன்னெடுக்கப்படும் ராஜ தந்திரங்களில் மிக முக்கியமான தந்திரம். இதே தான் ஜூலை 7ஆம் தேதியும் நடைபெற்றது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 509 புள்ளிகள் குறைந்து,65 ஆயிரத்து280 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 165 புள்ளிகள் சரிந்து 19ஆயிரத்து 331 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது. பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஆட்டோமொபைல் துறைகளைத்தவிர்த்து மற்ற துறை பங்குகள் விழுந்துவிட்டன.ஆற்றல் மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் ஒரு விழுக்காடு சரிந்தன. Adani Ports, Power Grid Corporation, Apollo Hospitals, IndusInd Bank ஆகிய துறை பங்குகள் பெரிதாக சரிந்தன,Tata Motors, Titan Company, M&M, SBI உள்ளிட்ட துறை பங்குகள் ஏற்றம் கண்டன. இந்திய சந்தைகள் ஒரு பக்கம் சரிந்தாலும், தங்கம் விலை பெரிய அளவில் மாற்றமில்லை. ஒரு கிராம் தங்கம் 3 ரூபாய் விலை குறைந்து 5457 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு சவரன் 43 ஆயிரத்து656 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் விலை குறைந்து, 75 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனையாகிறது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் விலை குறைந்து 75 ஆயிரத்து700ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விலைகளுடன் 3விழுக்காடு ஜிஎஸ்டி மற்றும் செய்கூலி,சேதாரம் சேர்க்கவேண்டும்,ஆனால் இவை இரண்டும் கடைக்கு கடை மாறுபடும்.