புத்துயிர் பெறுகிறது பிஎஸ்என்எல்..
எல்லாவாரங்களிலும் மத்திய அமைச்சரவை கூட்டம் புதன்கிழமைகளில் டெல்லியில் கூடுகிறது. இந்த வாரம் புதன்கிழமையில் அரசுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தை மேம்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பிஎஸ் என்எல் நிறுவனத்துக்கு மத்திய அரசு 89,047 கோடி ரூபாய் ஒதுக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சந்தை மூலதனம் ஒன்றரை லட்சம் கோடி ரூபாயில் இருந்து 2லட்சத்து 10ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தப்படுகிறது. பிஎஸ் என்எல் நிறுவனத்தின் இந்த செயல்களால் விரைவில் விட்ட மார்கெட்டை பிடிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இந்தாண்டு மட்டும் 52,937 கோடி ரூபாய் நிதி பிஎஸ்என்எல்லுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளில் பிஎஸ்என்எல்லை மேம்படுத்த 1லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட இருப்பதாக அரசு கூறியிருக்கிறது. புதிய டவர்களை அமைக்க மட்டும் இந்தியாவில் 53,000கோடி ரூபாயை அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பிஎஸ்என்எல் சேவையை மேம்படுத்த ஏற்கனவே மத்திய அரசு டாடா குழுமத்தின் டிசிஎஸ் நிறுவனத்திடம் 15,000 கோடி ரூபாய் ஒப்பந்த்தத்தை ஒப்படைத்துள்ளது. இதன் மூலம் பிஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களை மத்திய அரசு மீட்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறது.