மத்திய பட்ஜெட் 2022: NRI-களின் எதிர்ப்பார்ப்புகள்..!!
வெளிநாடுவாழ் இந்தியர்கள்(NRI), 2002-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், வரிச்சுமையை குறைத்தல், மற்றும் எளிதான இணக்க விதிமுறைகள் போன்ற சில கோரிக்கைகளை நிறைவேற்ற எதிர்பார்க்கின்றனர்.
NRI-க்களின் எதிர்பார்ப்புகள்:
மத்திய நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை(பிப்.1) தாக்கல் செய்கிறார். இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகளை வெளிநாடு வாழ் இந்தியர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
TDS விகிதத்தில் குறைப்பு, புதிய வருமானவரி படிவம்:
வெளிநாடுவாழ் இந்தியர்கள் தற்போது, மூலத்தில் 30 சதவீத வரி விலக்கு (டிடிஎஸ்) செலுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில், TDS விகிதத்தில் குறைப்பை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இது குடியிருப்பாளர்கள் மற்றும் குடியுரிமை இல்லாதவர்களிடையே அதிக சமநிலையைக் கொண்டு வரும் என்று கருதப்படுகிறது. வருமான வரி தாக்கல் செய்வதற்கு சிக்கல் இல்லாத புதிய வருமான வரி படிவங்கள் வேண்டும் என்றும், மூலதனம், நடப்புக் கணக்கு பரிவர்த்தனைகளுக்கான பணம் அனுப்புவதற்கான உச்சவரம்பை உயர்த்த வேண்டும் எனவும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
முதலீடுகளுக்கு குறைவான கட்டுப்பாடுகள்:
தற்போதைய சட்டங்களின்படி, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், தபால் அலுவலக சேமிப்பு அல்லது பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) கணக்கை என்ஆர்ஐகள் முதலீடு செய்ய முடியாது. பல தனிநபர்கள் முதலீட்டுக் கட்டுப்பாடுகள் தாராளமயமாக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
அடிப்படை விலக்கு வரம்பு விவாதம்:
குடியிருப்பாளர்கள் தங்கள் ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்துக்கு குறைவாக இருந்தாலும் மூலதன ஆதாயத்தின் மீது மொத்த வரி செலுத்த வேண்டும். பலர் தங்கள் மூலதன ஆதாயங்கள் அடிப்படை விலக்கு வரம்புக்கு எதிராக சரி செய்யப்பட வேண்டும் என்று கோரியுள்ளனர்.
பல NRI களும் பிரிவு 80 DDB (குறிப்பிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு சிகிச்சை) மற்றும் பிரிவு 80 DD (ஊனமுற்றோரைச் சார்ந்தவர்களுக்கு சிகிச்சை) ஆகியவற்றின் கீழ் வரி விலக்குகளுக்கு தகுதி பெற விரும்புகிறார்கள்.