இந்த சலுகைகள் கிடைக்குமா?
மத்திய பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பல்வேறு தரப்பினர் எதிர்பார்க்கும் பிரதானமான 7 அம்சங்கள் இதுதான்.
- ஸ்டான்டர்ட் டிடக்சன்
தற்போது வரை சம்பளம் வாங்கும் அனைவருக்கும் 2019-ல் கடைசியாக ஸ்டான்டர்ட் டிடக்ஷன் 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.இது தற்போது 60அல்லது 70 ஆயிரம் ரூபாயாக உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
2) 80C வரிச்சலுகை
வரி செலுத்தும் ஒவ்வொருவரும் தற்போது வரை 80சி சலுகை மூலம் ஆண்டுக்கு 1.5லட்சம் ரூபாய் வரை வரிச்சலுகைகள் பெற முடியும், இது தற்போது மாற்றி அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- வருமான வரி கணக்கு விலக்கு உச்சவரம்பு மாற்றம்..
தற்போது வரை 3 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கினால் வரிச்சலுகைக்கு பதிவு செய்ய வேண்டும், இனி 5 லட்சம் ரூபாய் வரை 0 வரி என்று அறிவிப்பு வருமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
4)NPS
தேசிய பென்ஷன் திட்டத்தில் 80சிசிடி 1பி பிரிவில் உச்சவரம்பை மாற்றம் தேவை என்றும் நிபுணர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
5)வரி குறைப்பு
புதிய வரிசெலுத்தும் முறை 2023-ல் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அது எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. புதிய வரிசெலுத்தும் முறையில் அதிகபட்ச வரி அளவு 30 விழுக்காடுக்கு பதிலாக 25 விழுக்காடாக குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
6)HRA
HRA சலுகைகள் அளித்தால் சாதாரண பொதுமக்களும் அதிகபலன்பெற முடியும் என்பதால் அரசாங்கம் இதை பரிசீலிக்க வேண்டும் என்றும், பெருநகரங்களில் இருப்போருக்கு உதவும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
7)மருத்துவ காப்பீட்டுக்கு பிடித்தம்..
அதிகரிக்கும் மருத்துவ செலவுகள் காரணமாக மருத்துவ காப்பீடு தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. இந்நிலையில் மருத்துவ காப்பீட்டுக்கான பிரீமியத்திற்கு வரிச்சலுகை அளித்தால் சிறப்பாக இருக்கும் என்பது சாதாரண சம்பளம் வாங்கும் நபர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.