பட்ஜெட்டும் நிதியமைச்சரின் விளக்கமும்
இந்த பட்ஜெட் பெண்கள் முன்னேற்றத்துக்கும், சுற்றுலாதுறையை மேம்படுத்தவும்,பசுமை வளர்ச்சிக்கான பட்ஜெட் என்று கூறியுள்ள நிதியமைச்சர், நிதிதொழில்நுட்பத்துறை வளர வேண்டும் என்பதற்காக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். நடுத்தர மக்கள் பயன்படும் வகையில் புதிய வருமான வரி திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள நிதியமைச்சர் புதிய வருமான வரித்திட்டம் 3 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டாலும் யாரையும் புதிய திட்டத்துக்கு வரும்படி கட்டாயப்படுத்தவில்லை என்றும்,இந்த பட்ஜெட் சரியாக பேலன்ஸ் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் சில்லறை மற்றும் ஒட்டுமொத்த பணவீக்கம் குறைந்துள்ளதாக கூறியுள்ள மத்திய அமைச்சர் நீண்ட நாளுக்கு பிறகு வருமான வரி சலுகை வரம்பு மாற்றப்பட்டுள்ளது என்றார் நடப்பு பட்ஜெட் சந்தை முதலீட்டை அதிகரிக்கும் பட்ஜெட் என்றும் கூறியுள்ளார்