பில்டிங் ஸ்டிராங்கு!!!! பேஸ்பெண்ட்???
அதீத வளர்ச்சி,திடீர் பெரும் சரிவு என அனைத்தையும் சந்தித்துள்ளது இந்திய பங்குச்சந்தைகள், டிசம்பர் 1ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலான காலகட்டத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 11 ஆயிரத்து 557 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது. உலகளவில் மீண்டும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் சூழலில் சந்தையின் போக்கே தலைகீழாக மாறி வருகிறது. துவக்கத்தில் தொடர்ந்து லாபத்தை ஈட்டித்தந்த இந்திய பங்குச்சந்தைகள், கடந்த வாரங்களில் லேசான சரிவை கண்டுள்ளன. சீனாவில் நிலவும் கொரோனா சூழல் மற்றும் சர்வதேச அளவில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள்,அமெரிக்கா மட்டுமின்றி உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. மொத்தம் 36 ஆயிரத்து 200 கோடி ரூபாய் அளவுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள்நவம்பர் மாதத்தில் பணத்தை கொட்டியுள்ளனர். உலகளவில் நடக்கும் சாதகமான சூழல்களின்போது மட்டுமே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியா பக்கம் திரும்புவதாகவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மாதம் 23ம் தேதி வரை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆட்டோ,கன்சியூமர் கூட்ஸ், மற்றும் கட்டுமானத்துறைகளில்தான் அதிகம் முதலீடுகள் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதேநேரம் 2 ஆயிரத்து 900 கோடி ரூபாய் நிதியை இந்திய சந்தைகளில் இருந்து எடுத்துச்சென்றுவிட்டதாகவும் புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.