உயர்ந்து முடிந்த சந்தைகள்
ஜூலை 30 ஆம் தேதி செவ்வாய்கிழமை, இந்தியப்பங்குச் சந்தைகள் சரிவில் இருந்து மீண்டு வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 99 புள்ளிகள் உயர்ந்து 81ஆயிரத்து 455 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 21 புள்ளிகள் உயர்ந்து 24ஆயிரத்து 857 புள்ளிகளிலும் வர்த்தகம் நிறைவுற்றது Power Grid, NTPC, Tata Motors,HDFC Bank உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபம் கண்டன. மருந்து, தகவல் தொழில்நுட்பம், ஆகிய நிறுவன பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. சிப்லா, சன் பார்மா, ஐடிசி, டிசிஎஸ் ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தன. சென்னையில் ஜூலை 30 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து விற்பனையானது. ஒருசவரன் 51 ஆயிரத்து080 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் தங்கம் 6,385 ரூபாயாக விற்கப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி முன்தின விலையில் இருந்து 50 காசுகள் குறைந்து 89 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளியும் விலையும் கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து 89 ஆயிரம் ரூபாயாக விற்கப்படுகிறது. மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் என குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படும் அது கடைக்கு கடை மாறுபடும், ஆனால் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடு கண்டிப்பாக அனைத்து நகைகளுக்கும் வசூலிக்கப்படும் என்பதை நகை வாங்குவோர் நினைவில் வைத்துக்கொள்ளவும்