தகித்த தங்கம் தற்காலிகமா மூச்சுவாங்குது..
அமெரிக்க பொருளாதார தரவுகள் வெளியாக உள்ள நிலையில் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலைபெற்றுள்ளது.
ஒரு அவுன்ஸ் தங்கம் 1981 டாலராக இருந்தது. அமெரிக்க பாண்ட் மார்க்கெட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம், பங்குச்சந்தைகளுக்கு மாற்றாக தங்கத்தில் முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை உச்சம் தொட்டிருந்தது. இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் போர் பரவும் அபாயமும் தங்கத்தின் விலையை கூட்டின.
அமெரிக்க பொருளாதார தரவுகள் குறித்த எதிர்பார்ப்பு கடுமையாக உயர்ந்திருப்பதால் தங்க விலை என்னவாகுமோ என்ற ஆவல் எகிறியுள்ளது. இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்திருக்கிறது.
ஒரு கிராம் தங்கம் 5660 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கம் 45ஆயிரத்து 280 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து 78 ரூபாய் 50 காசுகளாக உள்ளது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து 78ஆயிரத்து 500 ரூபாயாக விற்பனையாகிறது. இந்த விலைகளுடன் 3%ஜிஎஸ்டி மற்றும் செய்கூலி, சேதாரத்தையும் சேர்க்க வேண்டும். இவற்றில் ஜிஎஸ்டி நிலையானது. ஆனால் செய்கூலி,சேதாரம் கடைக்கு கடை மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.