ஆப்போ அது நடக்க போகுதா?
உலகிலேயே அதிக கவனத்தை ஈர்த்த மின்சார கார்உண்டு என்றால் அது நிச்சயம் டெஸ்லா நிறுவன காராகத்தான் இருக்கும். இந்த நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் இந்தியாவுக்கு வந்து இந்திய பிரதமர் அலுவலக அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவுக்கு வெளியேவும் தங்கள் உற்பத்தி ஆலை இருக்கவேண்டும் என்று விரும்பும் டெஸ்லா நிறுவனம் இந்தியாவை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் முன்னர் கடுமையான விதிகள் இருந்ததால் அந்த நிறுவனம் இந்தியாவில் கார் தயாரிக்கவோ விற்கவோ முன்வரவில்லை. ஆனால் தற்போது படிம எரிபொருளை குறைக்கும் நோக்கில் இந்திய அரசு மின்சார கார்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதனை அறிந்த டெஸ்லா அதிகாரிகள் இந்தியாவில் உற்பத்தியை தொடங்க இருக்கின்றனர். இந்த சூழலில் அமெரிக்க அதிகாரிகள் தங்கள் பெயர்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். இந்தியாவில் தாராளமாக டெஸ்லா நிறுவனத்தை வரவேற்பதா கூறியுள்ள அரசு அதிகாரிகள் ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் விதித்துள்ளனர். அது யாதெனில் வெளிநாட்டில் இருந்து பொருட்களை குறிப்பாக சீனாவில் இருந்து பொருட்களை இறக்ககூடாது என்பது மட்டுமே முக்கிய கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் தனது செல்போன்களை இந்தியாவில் 7விழுக்காடு இந்தியாவில் உற்பத்தி செய்யும் நிலையில், தற்போது டெஸ்லா அதிகாரிகளும் பிரதமர் அலுவலக அதிகாரிகளை சந்திக்க இருப்பது கவனம் பெற்றுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் பென்ஸ் கார்கள் மின்சார வாகன உற்பத்தியை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தற்போது டெஸ்லாவும் இணைந்துள்ளதால் இந்தியா விரைவில் உற்பத்தி கேந்திரமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.