“100 விமானங்கள் வாங்குவது முட்டாள்தனமானது”
தருண் சுக்லா என்பவர் எழுதிய ஸ்கை ஹை -அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் இண்டிகோ என்ற புத்தகம் மிகப்பெரியகவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்த புத்தகத்தை ஹார்பர் பிசினஸ் நிறுவனம் அச்சிட்டுள்ளது. அதில் இண்டிகோ நிறுவனத்துக்கும் ஏர்பஸ் நிறுவனத்துக்கும் இடையே எப்படி இத்தனை விமானங்களுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது என்ற ஆரோக்கியமான விவாதம் இடம்பிடித்துள்ளது. குறிப்பாக விமான நிறுவனம் வைத்திருந்த இண்டிகோ அதிகாரிகள் எப்படி 100க்கும் மேற்பட்ட விமானங்களை வாங்கினார்கள் என்பதை ரசிக்கும்படி எழுதியுள்ளனர். ஏர்பஸ் நிறுவனத்தின் இந்திய அதிகாரி நிகல்ஹார்வுட்டை இண்டர் கிளோப் நிறுவனத்தின் ராகுல்பாட்டியா சந்தித்து பேசியுள்ளார். இவர் எங்கே விமானங்களை வாங்கப்போகிறார் என்று ஹார்வுட் தரப்பு குறைத்து மதிப்பிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏர்பஸ் நிறுவனத்தின் தலைநமை அலுவலகம் டவ்லஸ் நகரில் அமைந்துள்ளது. ராகுல்பாட்டியாவின் சந்திப்பைத் தொடர்ந்து ராகேஷ் கங்க்வாலையும் சந்தித்து விடும்படி ஹார்வுட்டிடம் ராகுல் கூறியிருந்தார். அந்த நேரம் ஏர்பஸ்ஸின் தலைமை செல் அதிகாரி ஜான்லே இந்த சந்திப்பை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. டாடா அளவுக்கு இண்டிகோ வளராத அந்த காலத்தில் இந்த சம்பவம் நடந்ததாக புத்தகம் குறிப்பிடுகிறது. இந்தியாவில் இருந்து 100 விமானங்கள் வாங்க வந்துள்ளனர் என்ற தகவல் முட்டாள்தனமானது என்றே ஏர்பஸ் நிறுவனத்தினர் நம்பியிருந்தனர். இந்த நிலையில்தான் 100 விமானங்கள் வேண்டும் என்ற முரட்டு டீலை இந்தியர்கள் முடித்தனர். இதனால் ஏர்பஸ் நிறுவனம் திக்குமுக்காடிப்போனது. 6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கான டீல் முடிந்துள்ளதையும் அந்நிறுவனம் நினைவுகூர்ந்துள்ளது. 2005-ல் 135 ஏர்பஸ் விமானங்களை இண்டிகோ நிறுவனம் வாங்கியிருந்தது. வழக்கமாக பிரான்சில் 35 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்குத்தான் விமானங்கள் விற்கப்படும் நிலையில் முரட்டு டீல் முடிந்ததால் இண்டிகோவுக்கு ஒரு விமானம் 25 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவே விற்கப்பட்டதாக ததவல் வெளியாகியுள்ளது.