வணிக வாகனத்தை அறிமுகப்படுத்திய பிஒய்டி..
சீனாவை தலைமை இடமாக கொண்டு இயங்கும் பிஒய்டி நிறுவனம் தனது முதல் சரக்கு வாகனத்தை மெக்சிகோவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஷார்க் என்று அந்த வாகனத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. நடுத்தர வாகனமான இந்த வாகனத்தில் எரிபொருள் மற்றும் மின்சாரம் என எது வேண்டுமானாலும் மாற்றி பயன்படுத்த இயலும். ஃபோர்ட், ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் டொயோடா நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் மெக்சிகோவில் இந்த வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டது. ரேடியேட்டர் கிரில்லின் பகுதியில் பிஒய்டி இலச்சினையும், எல்இடி விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பிட்ட பிக்கப் வாகனத்திற்குள் 12.8 அங்குகள உருளும் வகையிலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. 10.25 அங்குல டிஜிட்டல் காஜ் கிளிஸ்டர், 12 அங்குல ஹெட்ஸ் அப் டிஸ்பிளேவும், ஒயர்லெஸ் ஆப்பிள் கார் பிளேவும், ஆண்டிராய்டு ஆட்டோ கணெக்டிவிட்டி வசதியும், இரண்டு பக்கமும்சார்ஜ் செய்யும் வசதியும் இடம்பிடித்துள்ளது. இந்த டிரக்கின் விலை குறித்த அதிகாரபூர்வ தகவல் இந்தியாவில் விரைவில் வெளியாக உள்ளது.