ஆயிரம் பேரை தூக்கும் பைஜூஸ் நிறுவனம்!!!
கல்வி சார்ந்த தொழில்நுட்ப நிறுவனமான பைஜூஸ், தனது பணியாளர்களில் ஆயிரம் முதல் 1200 பேரை பணியில் இருந்து நீக்க இருப்பதாக அறிவித்துள்ளது நிதி இழப்பு,முதலீடுகள் சரிவு மற்றும் மந்தநிலை காரணமாக இந்த முடிவை அந்த நிறுவனம் எடுத்துள்ளது. பொறியியல்,விற்பனை, சரக்குகள்,வணிகம், மற்றும் தகவல் பரிமாற்றப்பிரிவில் பணியாளர்களை பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர்,பொறியியல் பிரிவில் 300 பேரும்,லாஜிஸ்டிக்ஸ் பிரிவில் 50விழுக்காடு பணியாளர்களும், நீக்கப்பட்டுள்ளனர். தற்போது பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்கள் மீண்டும் ஆட்களை எடுக்கும்போது முன்னுரிமை அளிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் தெரிவிக்காமல் கூகுள் மீட்டில் மீட்டிங் என்று பணியாளர்களை அழைத்து நீங்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டீர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் கல்வி மிகவும் பிரபலமாக இருந்த நேரத்தில் அளவுக்கு அதிகமாக பணியாளர்களை புதிதாக வேலைக்கு எடுத்துவிட்டு,அவர்களுக்கு சம்பளம் தர முடியாமல் சிக்கின நடவடிக்கையாக தற்போது ஆட்குறைப்பில் பைஜூஸ் நிறுவனம் இறங்கியுள்ளது.