ஆட்குறைப்பை போன் செய்து சொல்லும் பைஜுஸ்..

ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கே ஸ்பான்சர் செய்த பைஜூஸ் நிறுவனம் மிகப்பெரிய திவால் நிலையை சந்தித்து வருவகிறது. நிலைமை இப்படி இருக்கையில், பணத்தை மிச்சப்படுத்த , தேவையில்லாத பணியாளர்களை ஆட்குறைப்பு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தங்கள் பணியாளர்களுக்கு போன் செய்துள்ள பைஜூஸ் நிறுவன உயர் அதிகாரிகள், எந்தவித நோட்டீஸ் பீரியடும் இல்லாமல் உடனடியாக வேலையில்லை என்று ஊழியர்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.
ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும் திறமைக்கு தகுந்த ஊதிய உயர்வு உள்ளிட்ட எதையும் கருத்தில் கொள்ளாமலும், நோட்டீஸ் பீரியடில் வேலை செய்யாமலும் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பி வருகிறது. இப்படி மொத்தமாக 100 முதல் 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் அந்நிறுவனம் 10ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளது. பைஜூஸ் நிறுவனத்தின் நிறுவனர் ரவீந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் வழக்குகளும் தொடுக்கப்பட்டுள்ளன. எனவே புதிய இயக்குநர்களை நியமிக்க அந்த நிறுவனத்தை முதலீட்டாளர்கள் நிர்பந்திக்கின்றனர்.
நாடு முழுவதும் உள்ள 292-ல் 30 டியூசன் மையங்களை பைஜூஸ் நிறுவனம் மூடியிருக்கிறது. 90 விழுக்காடு தற்போதும் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. எத்தனை மையங்கள் என்பதை விட அத்தனை தரமான கல்வி வேண்டும் என்பதே இலக்கு என்று பைஜூஸ் நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கடும் நிதி நெருக்கடையை சந்தித்து வரும் பைஜூஸ் நிறுவனம், சட்டரீதியிலும் பல சிக்கல்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.