பைஜூஸின் திவால் நோட்டீஸ்..
ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கே ஸ்பான்சர் தந்த பைஜுஸ் நிறுவனம் தற்போது திவால் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம், பைஜூஸ் நிறுவனத்தின் திவால் நடவடிக்கைகளுக்கு இசைவு தெரிவித்துள்ளது. 158 கோடி ரூபாய் பணத்தை பிசிசிஐக்கு பைஜூஸ் தரவேண்டும், திவால் நடவடிக்கை தீவிரமடைந்தால் பைஜூஸ் நிறுவன தலைமை பதவியில் இருந்து பைஜு ரவீந்திரன் மற்றும் அவரின் சகோதரர் ரிஜு மற்றும் ரிஜூவின் மனைவி திவ்யா கோகுல்நாத் ஆகியோர் விலக வேண்டும். பைஜூஸின் மொத்த சொத்துகளையும் வாங்க ஒரு நபரை குழு ஒன்று தேட இருக்கிறது. தவறும்பட்சத்தில் நிறுவனத்தை சிறு சிறு பாகங்களாக விற்கவேண்டும். ஏற்கனவே இதே பிரச்சனையில் அமெரிக்காவிலும் இதே பிரச்சனை உள்ளது. பிசிசிஐக்கு அளிக்க வேண்டிய தொகையை கோர்ட்டுக்கு வெளியே தீர்த்துக்கொள்ள இருப்பதாக பைஜூஸ் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.