இப்போதைக்கு வீடு வாங்கலாமா கூடாதா நிபுணர்கள் என்ன சொல்றாங்க…!!!
நீங்க டீவில, பேப்பர்ல, இண்டர்நெட்ல பாக்குற 10 விளம்பரத்துல 8 விளம்பரம் வீடு வாங்குறது பத்திதான் இருக்கும்னு எப்பவாச்சும் கவனிச்சிருக்கீகளா.. உண்மைதான், வீடு கட்டும்போது பெரிய நிறுவனங்கள் கணிசமான கடன் வாங்கி கட்டிமுடிச்சிட்டாங்க, ஆனா அதை வாங்கத்தான் ஆட்களை காணோம் என்கிற நிலைதான் தற்போது உள்ளது.
உலகளவில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலையும், ரிசர்வ் வங்கி உயர்த்திய வட்டி விகிதங்களாலும் வீடு வாங்கும் திட்டத்தை பலரும் ஒத்தி வைத்துள்ளனர் அண்மையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட ரெபோ வட்டி விகிதத்தால் கடன்களுக்கான விகிதம் 6.25%ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு இருந்த அளவுக்கு பிறகு இதுவே அதிகளவாக உள்ளது.
அதிகரிக்கும் வட்டி விகிதம் மற்றும் வீடுகளை வாங்குவோர் சற்று தயங்கி வருவதால் 2023-ம் ஆண்டு நிலைமை இன்னும் மோசமாகும் என்று தெரிகிறது. இந்திய அளவில் முக்கிய நகரங்களில், வீடுகள் வாங்குவோர் கடந்த 2013ம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் மோசமான நிலை உள்ளது. இந்தியாவில் 2013-ம் ஆண்டு முதல் 2021 வரை மட்டுமே வீடுகள் வாங்க சிறந்த காலமாக இருந்ததாகவும், நடப்பாண்டு வீடுகளை வாங்குவோரின் அளவு கணிசமாக குறைந்திருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒட்டு மொத்த இந்தியாவில் மும்பையில் மட்டுமே கட்டும் வீடுகள் விற்றுத்தீர்ந்துவிடுவதாகவும், பிற நகரங்களில் தொய்வு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜே எல்எல் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் 2022-ல் மக்கள் வீடுகளை இப்போது வாங்க ஆர்வம் காட்டுவது குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.