4 நாட்கள் இந்த வங்கி இருக்காதா என்னங்க சொல்றீங்க…
உலகத்திலேயே பணம் சார்ந்த சொகுசான பணி செய்வோர் என்றால் அது வங்கிப் பணியாளர்கள்தான் என்று பரவலான கருத்து இருக்கிறது. ஆனால் எங்களுக்கு எவ்வளவு கஷ்டம் இருக்கு தெரியுமா என்று அவர்களும் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். வரும் 30 மற்றும் 31ம் தேதிகளில் வங்கிப்பணியாளர்கள் சங்கமான UFBU போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் என்ன பாதிப்பு வரப்போகிறது என்று தான் கேட்கிறீர்கள்? விஷயம் இருக்கிறது. வியாழக்கிழமை குடியரசு தின விடுமுறையை அடுத்து வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டுமே பொதுத்துறை வங்கிகள் இயங்க வாய்ப்புள்ளது. 28,29 ஆகிய நாட்கள் சனி,ஞாயிறு என்பதால் தொடர் விடுமுறையாகி விடுகிறது. UFBU அமைப்பினர் 30,31 ஆகிய தேதிகளில் போராட்டம் மற்றும் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளதால் தொடர்ந்து 4 நாட்கள் பாரத ஸ்டேட் வங்கி சேவை இல்லாமல் போக வாய்ப்புள்ளது. எனவே மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்ளும்படி பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. வங்கி ஊழியர்களுக்கு என்னதான் வேணுமாம்? NPS எனப்படும் தேசிய ஓய்வூதிய திட்டம், சம்பள உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஆகிய முக்கிய அம்சங்கள்தான் வங்கி ஊழியர்கள் சங்கம் முன்வைக்கும் முக்கிய கோரிக்கையாகும்.