ATM கார்டு இன்றி பணமெடுக்கும் வசதி.. – மோசடிகளை தடுக்க RBI திட்டம்..!!
ஏடிஎம் கார்டுகள் மூலம் நடைபெறும் மோசடிகளை தடுக்க அனைத்து வங்கி ஏடிஎம்களிலும் கார்டு இன்றி பணமெடுக்கும் வசதி ஏற்படுத்தப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கையை வெளியிட்டு பேசிய அவர், Credit Card, Debit Card ஆகியவற்றை ஸ்கிம்மிங் செய்து பணம் எடுப்பது, கார்டுகளை நகல் எடுத்து மோசடியில் ஈடுபடுவது போன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த மோசடிகளை தடுப்பதற்காக, அனைத்து வங்கிகளிலும் கடன் அட்டைகள் இன்றி பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி அனுமதிக்கும் என்றும், இந்த வசதியை அனைத்து வங்கிகளுடைய ஏடிஎம்களிலும் விரைவில் நடைமுறைக்கு வரும் எனவும் சக்தி காந்ததாஸ் கூறினார்.
தற்போது ஒருசில குறிப்பிட்ட வங்கிகளில் மட்டும் வாடிக்கையாளர்களின் விருப்பத்தின்படி, இந்த வசதி வங்கியுடன் இணைந்துள்ள ஏடிஎம்களில் அனுமதிக்கப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் அனைத்து வங்கி ஏடிஎம்களிலும் கார்டுகள் இன்றி பணம் எடுக்கும் வசதி கொண்டு வரப்படும் என்றும், இதற்காக அனைத்து ஏடிஎம்களும் UPI Network-ஐ பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும். இதனால் அட்டைகள் மூலம் நடக்கும் மோசடிகள் தடுக்கப்படும் என்று சக்தி காந்த தாஸ் குறிப்பிட்டார். UNIFIED PAYMENTS INTERFACE(UPI) முறையின் மூலம் வாடிக்கையாளர்களுடைய நம்பகத்தன்மை உறதி செய்யப்பட்டு, ஏடிஎம்கள் மூலம் பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார்.