இந்தா புடி… இன்சாய்!!!
அமெரிக்க நிறுவனமான அமேசானுக்கு போட்டியாகவும் இந்தியர்களுக்கு எளிதாக ஒன்றி போகக்கூடிய மின்வணிக நிறுவனமாகவும் ஃபிளிப்கார்ட் உள்ளது. இந்த நிறுவனத்தில் பணியாற்றும் 25 ஆயிரம் பேருக்கும் பணம் அளிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மொத்தம் 700 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை பரிசாக ஃபிளிப்கார்ட் அளிக்க இருக்கிறது. இந்த பரிசுத் தொகையை ரொக்கமாகவோ அல்லது பங்குகளாகவோ வாங்கிக்கொள்ளும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் நிறுவனத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் ஊழியர்களில் மூத்த நிர்வாகிகளுக்கு மட்டுமே இந்த பரிசுத்தொகையில் 200 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஃபிளிப்கார்ட் தற்போது வால்மார்ட் வசம் இருந்தாலும், ஃபிளிப்கார்ட் ஒரு தனி நிறுவனமாகவும், போன்பே வேறு நிறுவனமாகவும் இனி செயல்பட இருக்கிறது ஆனால் ஒட்டுமொத்தமாக வால்மார்ட் வசமே இந்த இரண்டு நிறுவனங்களும் தற்போது உள்ளன. பங்குகளை வெளியிடுவதும், நிதிகளை பெறுவதையும் ஒரே நேரத்தில் செய்யும் ஃபிளிப்கார்ட் நிறுவனம் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.