கோத்ரேஜ் செட்டில்மண்ட்க்கு சிசிஐ ஒப்புதல்..
கோத்ரேஜ் குழுமத்தின் நிறுவனங்கள்4பிரிவுகளாக இருந்த போதிலும் குடும்ப சொத்து பிரிக்கும் முடிவுக்கு இந்திய போட்டி ஆணையமான சிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது. ஆதி கேத்ரேஜ், நாடிர் கோத்ரேஜ், ஜம்ஷைத் மற்றும் ஸ்மித்தா என 4 பிரிவுகளாக சொத்து பிரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 30,2024 அன்று பிரிக்கப்பட்ட சொத்துக்கு சிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது.
கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ், கோத்ரேஜ் கன்சியூமர் பிராடக்ட்ஸ், கோத்ரேஜ் பிராபர்டீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இனி தனித்தனி உரிமையாளர்களின் கீழ் கோத்ரேஜ் என்ற குடும்ப பெயர் மாற்றாமல் இயங்கும். சொத்து பிரிவுக்கு பிறகு கோத்ரேஜ் கன்சியூமர் பிராடக்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 0.51விழுக்காடு உயர்ந்திருக்கிறது. 1897 ஆம் ஆண்டு அர்தேஷிர், பிரோஜ்ஷா புர்ஜோர்ஜி கோத்ரேஜ் ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது அடுத்த தலைமுறையின் கைகளில் சேர்ந்திருக்கிறது. வாடிக்கையாளர்கள் அன்றாடும் பயன்படுத்தும் பொருட்கள்,ரியல் எஸ்டேட், பர்னிச்சர், பாதுகாப்பு மற்றும் விவசாயம் சார்ந்த பொருட்களை கோத்ரேஜ் நிறுவனம் தயாரித்து வருவது குற்பிபட்தத்கது.