ஹெல்த் அன்ட் குளோ நிறுவனத்தை வாங்கிய பிரபலம்!!!!
இந்தியாவில் டி மார்ட் வணிக நிறுவனம் அசுர வளர்ச்சி பெற்ற நிறுவனங்களில் ஒன்று என்றால் அது மிகையல்ல. இந்த நிறுவனத்தை ராதாகிருஷ்ணன் தமானி என்பவர் நடத்தி வருகிறார். டிமார்ட் கடைகள் மற்றும் அவென்யு சூப்பர்மார்க்கெட்களை அவர் ஒரே நேரத்தில் நடத்தி வருகிறார். இந்தநிலையில் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஹெல்த் அன்ட் குளோ என்ற நிறுவனத்தை ராதாகிருஷ்ணன் தமானி 750 கோடி ரூபாய்க்கு வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜன் ரஹேஜா , ஹேமேந்திர கோத்தாரி ஆகியோர் இந்த ஹெல்த் அன்ட் குளோ என்ற நிறுவனத்தை நடத்தி வந்தனர். இவர்களுக்கு தற்போது சிமென்ட் துறை மீது ஆர்வம் சென்றுள்ளது.எக்சைடு பேட்டரிகளை இந்த குடும்பத்தினர் நடத்தி வரும் நிறுவனம்தான் தயாரிக்கிறது.ஹாத்வே இணையசேவை வழங்கும் நிறுவனத்தையும் ராஜன் ரஹேஜா குடும்பத்தினர்தான் முதலில் தொடங்கினர் பின்னர் அது ரிலையன்ஸ் குழுமத்துக்கு விற்கப்பட்டது இந்தியாவில் அழகியல் சார்ந்த துறைகளில் 18.3பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தகம் கொண்டுள்ளது. இந்த துறையில் பெரிய பெரிய பிராண்டுகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் 1997-ல் சென்னையில் தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்ட ஹெல்த் அன்ட் குளோ நிறுவனம் தற்போது பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. இந்தியாவில் பெங்களூரு,மங்களூரு,புனே,சென்னை,கொச்சி,கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஹெல்த் அன்ட் குளோ நிறுவனம் தனது கிளையை தொடங்கியது. 370 கோடி ரூபாய் வரை வணிகம் நடக்கும் இந்த அழகியல் சார்ந்த நிறுவனம் வெறும் 750 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.