டெஸ்லா கார்களை புகழ்ந்த பிரபலம்..
NVIDIA நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளவர் ஜென்சென் ஹுவாங். இவர் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் டெஸ்லா நிறுவனத்தை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். யாஷூ நிதி பிரிவு கூட்டத்தில் பேசிய ஜென்சென்,தானியங்கி கார்கள் துறையில் டெஸ்லா நிறுவனம் மற்றவர்களைவிட முன்னோடியாக இருப்பதாக கூறினார். விரைவில் இந்த கார்கள், ஓட்டுநர்கள் யாரும் இல்லாமல் பயணிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கிராபிக்ஸ் பிராசசசிங் யூனிட் என்ற உபகரணத்தை வடிவமைத்து வரும் என்விடியா நிறுவனம், செயற்கை நுண்ணறிவுக்கு தகுந்தபடி புதிய மாற்றத்தை செய்து வருகிறது. பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஜிபியுகளை சப்ளை செய்வதில் அந்நிறுவனம் தனித்துவம் கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு சார்ந்த பெரிய நிறுவனங்களுக்கு தங்கள் நிறுவன கிராபிக்ஸ் கருவிதான் 80 விழுக்காடு சந்தையை கொண்டிருப்பதாகவும் ஜென்சன் தெரிவித்துள்ளார்.. கணினி வேலையை எப்படி மாற்ற முடியும் என்றும் கணினிகள் என்னவெல்லாம் செய்யும் என்று உலகிற்கு காட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். வரும் மாதத்தில் டெஸ்லா பங்குகள் குறித்து வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. 47 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி குறித்து பங்குதாரர்கள் மஸ்கை கேள்வி எழுப்ப இருக்கின்றனர். தற்போதைய செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை சீட்டுக்கட்டு ஆட்டம் என்றுமஸ்க் ஏற்கனவே வர்ணித்து இருந்தார். 500மில்லியன் அமெரிக்க டாலர்களை NVIDIA செயற்கை நுண்ணறிவு சிப்களில் முதலீடு செய்ய இருப்பதாகவும் முன்னதாக எலான் மஸ்க் குறிப்பிட்டார்.