ரூ.2,000 நோட்டுக்காக கம்பு சுத்தும் பிரபலங்கள்..
புழக்கத்தில் இருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக மே 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.மே 23ம் தேதியில் இருந்து வங்கிகளில் கொடுத்து பணத்தை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த முயற்சி கருப்புப்பணத்தை ஒழிக்க முக்கியமான நடவடிக்கை என்று பிரதமரின் முன்னாள் முதன்மை ஆலோசகர் நிரிபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். 2 ஆயிரம் ரூபாய்நோட்டுகளை திரும்பப்பெறுவதும், 2016-ல் இருந்த பணமதிப்பிழப்பும் வேறு வேறு அம்சங்களை கொண்டவை என்று கூறியுள்ள மிஸ்ரா,கருப்பு பணத்தை ஒழிக்கும் முயற்சியில் இந்த அறிவிப்பு உதவும் என்று தெரிவித்துள்ளார். கடந்த 2016-ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் மிஸ்ரா பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றி இருந்தார். 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளால் பொதுமக்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாது என்று கூறியுள்ள அவர், ஏழை மக்களிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இல்லை என்று கூறிய அவர், பணம் பதுக்குவோரிடம் இருக்கும் பணம் வெளியே வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வரி ஏய்ப்பு செய்வோருக்கு எதிரான நடவடிக்கையாக பணமதிப்பிழப்பு பார்க்கப்பட்டது.. இதே கருத்தை ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார். கருப்புப்பணத்தை பெரிய அளவில் தடுக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் காந்தி தெரிவித்தார்.