Cello நிறுவன IPO வெளியாகிறது விவரம் உள்ளே..
வீட்டு உபயோக பொருட்கள்,எழுதுபொருட்கள் மற்றும் படிப்பு சார்ந்த பொருட்களை தயாரித்து வரும் நிறுவனம் செலோ. இந்த நிறுவனம்,வீடுகளுக்கு தேவையான அலங்கார பொருட்களையும் தயாரித்து வருகிறது. செலோ வேர்ல்ட் என்ற நிறுவனத்தின் ஆரம்ப பங்கு வெளியீடு சந்தையில் அக்டோபர் 30ஆம்தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 617 ரூபாயில் இருந்து 648 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்டியலிடப்படாத சந்தையில் இந்த பங்குகள் பிரீமியம் தொகையாக 90 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆங்கர் முதலீட்டாளர்கள் வாயிலாக 567 கோடியை இந்த நிறுவனம் பெற்றுள்ளது. கோல்ட்மேன் சாச்ஸ்,நோமுரா, மார்கன் ஸ்டான்லி உள்ளிட்ட நிறுவனங்களும் இந்த பங்கை வாங்க ஆர்வம் காட்டியுள்ளனர். வரும் நவம்பர் 1ஆம் தேதி இந்த சலுகை முடிவடைய இருக்கிறது.ஆயிரத்து 900 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளை பெற திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு லாட்டில் 23 பங்குகள் இருக்கின்றன. அதனை மொத்தமாக வாங்கும் வகையில் தொகுப்புகள் வைக்கிப்பட்டுள்ளன. நிறுவனத்தின் புரமோட்டர்கள்,வசம் உள்ள பங்குகளை விற்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 50 விழுக்காடு பங்குகள் விற்கப்பட இருக்கும் சூழலில் 15விழுக்காடு நிறுவனங்கள் அல்லாத முதலீட்டாளர்களுக்கும், 35% முதலீடுகள் ரீட்டெயில் முதலீட்டாளர்களும் செய்யும் வகையில் ஐபிஓ வெளியிடப்பட இருக்கிறது.
அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 10 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யலாம் என்று ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. 23 நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளால் லாபம் 32% கிடைத்திருக்கிறது.நிகர லாபம் 30%உயர்ந்திருக்கிறது. அதாவது 285 கோடி ரூபாய் லாபமாக கிடைத்திருக்கிறது. இந்த பங்குகள் தேசிய பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.