சிமென்ட் விலை மேலும் உயர்வு..
கட்டுமானப்பணிகளில் மிகவும் அவசியமானதாக உள்ள சிமென்ட்டின் விலை ஒரு மூட்டைக்கு 10 முதல் 15 ரூபாய் இந்தமாதம் அதிகரித்துள்ளது. தேர்தல் நேரத்தில் கட்டுமானப்பணிகள் முடங்கியிருக்கும் இந்த நேரத்தில் தேவையும் குறைந்திருக்கிறது. அதே நேரம் விலைகளும் உயர்ந்துள்ளன. தென்னிந்தியாவிலும் இந்த விலையேற்றம் கணிசமாக காணப்படுகிறது. குறிப்பாக சில இடங்களில் ஒரு மூட்டைக்கு 20 ரூபாய் வரை கூட உயர்ந்திருக்கிறது. கடந்த டிசம்பர் வரையிலான காலண்டை ஒப்பிடுகையில் சராசரி விலை 5-6 விழுக்காடு குறைவாகவே இருந்தது. இதனால் இந்தியாவின் கிழக்கு மற்றும் தென்னிந்தியாவில் பயன்பாடு அதிகமாக இருந்தது. வழக்கமாக ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் சிமென்ட் தேவை அதிகமாக காணப்படும், இந்த காலகட்டத்தில் சிமென்ட் விலையை நிறுவனங்களால் உயர்த்த முடியவில்லை.
மற்ற நிறுவனங்கள் விலையை உயர்த்தும்போது நாமும் உயர்த்தலாம் என்ற எண்ணம் சிமென்ட் நிறுவனங்களிடம் கடந்த மாதம் வரை இருந்தது. விலை உயர்வு காரணமாக விற்பனை மேலும் சரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தை குறிவைத்தே இந்த விலை உயர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், சோதனை செய்து , ஒரு வேளை வருவாய் குறையும் பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவும் சிமென்ட் உற்பத்தியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். தென் இந்தியாவில் ஒரு மூட்டை சிமென்ட்டின் விலை 30 முதல் 50 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது. இதே நேரம் இந்தியாவின் மத்திய பகுதியில் 15 முதல் 20 ரூபாய் வரை சிமென்ட் விலை உயர்ந்திருக்கிறது. வட இந்தியாவில் 10 முதல் 15 ரூபாயாக இந்த விலையேற்றம் உள்ளது. இந்தியாவின் மேற்கு பகுதியில் இந்த விலை 20 முதல் 25 ரூபாயாகவும், கிழக்கு பகுதிகளில் புதிய விலைப்படி, ஒரு மூட்டைக்கு பழைய விலையை விட 30 ரூபாய் வரை உயர்ந்திருப்பதும் தெரியவந்திருக்கிறது.