சாம்சங்குக்கு மத்திய அரசு எச்சரிக்கை..
சாம்சங் செல்போன் நிறுவனத்துக்கு மத்திய அரசின் CERTநிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும், சாம்சங்கின் ஆண்டிராய்டு 11,12,13,14 ஆகிய மாடல் செல்போன்களில் அபாயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக எளிதாக சாம்சங் செல்போன்களில் ஹேக்கர்கள் உள்ளே நுழைய முடிவதாகவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது. KnoxCustomManagerService,SmartManagerCN component ஆகிய சில இடங்கள் மிகவும் மந்தமாக இருப்பதாகவும், போதுமான பாதுகாப்பு பரிசோதனைகள் செய்யவில்லை என்றும் மத்திய அரசு சாடியிருக்கிறது. பாதுகாப்பு குறைபாடுகளால் சிம் பின், சான்ட்பாக்ஸ் தரவுகளை வெளியில் இருந்து ஒருநபர் எளிதாக பிடிக்கும் வகையில் குறைபாடுகள் உள்ளதாகவும் சாம்சங்குக்கு தலையில் குட்டு வைத்திருக்கிறது மத்திய அரசு.
பாதுகாப்பு அப்டேட்களை சாம்சங் செய்ய வேண்டும் என்றும், புதிய அப்டேட் கிடைக்கும் வரை சாம்சங் செல்போன் பயன்படுத்துவோர் கவனமாக இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தனது சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நம்பிக்கையில்லாத, தெரியாத நபர்களிடம் இருந்து தகவல்கள் வந்தால் அதனை பொதுமக்கள் கவனமுடன் கையாள வேண்டும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.