H1B விசா நடைமுறையில் மாற்றம்..?
அமெரிக்காவில் தங்கி வேலை செய்யும் டெக் பணியாளர்களுக்கு உதவும் விசாவுக்கு பெயர் எச்1பி விசா. இந்த விசா வெகு சிலருக்கு மட்டுமே ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் எச்1பி விசா மற்றும் எல்1 விசாக்களில் புதிய மாற்றத்தை அமெரிக்க அரசு கொண்டுவர இருக்கிறது. ஹோம்லேண்ட் செக்யூரிட்டி மற்றும் அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்புக்கு புதிய கட்டணத்தை வசூலிக்க திட்டமிட்டுள்ளது. வேலைக்கு செல்பவர்கள் மட்டுமில்லை எச்1பி விசாவில் கல்லூரி படிப்பு படிக்க செல்லும் மாணவர்களும் 3 ஆண்டுகள் வரை அமெரிக்காவில் தங்கி படிக்க முடியும். தற்போதுள்ள விதிகளைவிட கடுமையான விதிகளை நிறுவனங்களுக்கு விதிக்க அமெரிக்க குடியுரிமை மற்றும் சேவைகள் அமைப்பு திட்டமிட்டுள்ளது. தற்போது வரை என்ட்ரி-எக்சிட் கட்டணம் மட்டும் எச்1 பி விசா பெறுவோருக்கு வசூலிக்கப்படுகிறது. புதிய விதிப்படி மேலும் கட்டணம் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய திட்டத்தின்படி ஒரு எச்1பி விசா நட்டிக்க 4ஆயிரம் அமெரிக்க டாலர்களும், எல்1பி விசாவை நீட்டிக்க 4,500 டாலர்களும் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. பயோ மெட்ரிக் சிஸ்டம், மற்றும் தேசிய பாதுகாப்புக்காக நிறுவனங்கள் பங்களிப்பை அதிகரிக்க இந்த புதிய விதிகள் மாற்றப்பட இருக்கின்றன. புதிய விதிகள் அமலாகும்பட்சத்தில் இந்திய பணியாளர்கள் வெகுவாக பாதிக்கப்பட உள்ளனர். குறிப்பாக மென்பொறியாளர்கள் ஆயிரக்கணக்கானோர் இந்த விசாவை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள நிலையில் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.