சென்னை ஃபோர்ட் ஆலை கைமாறுகிறதா?

JSW நிறுவனத்தின் தலைவராக சஜ்ஜன்ஜிண்டால் இருக்கிறார்.இவர் சென்னையில் உள்ள ஃபோர்ட் நிறுவனத்தை வாங்க திட்டமிட்டுள்ளார். மின்சார கார்கள் துறையில் ஜிண்டால் நிறுவனமும் கால்பதிக்க திட்டமிட்டுள்ளதால் , சென்னை அருகே இருக்கும் ஃபோர்ட் நிறுவனத்தை கைப்பற்ற பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. 2 மாதங்களுக்கு முன்பே இதற்கான பணிகள் தொடங்கி உள்ளதாகவும்,தமிழ்நாடு அரசு மற்றும் ஃபோர்ட் நிறுவனத்திடம் இது குறித்து பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன ஆண்டுக்கு 2லட்சம் வாகனங்கள் வரை தயாரிக்கும் திறமை கொண்ட இந்த ஆலை 350 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது.3 லட்சத்து 40ஆயிரம் இன்ஜின்களை தயாரிக்கவும் இந்த ஆலையில் வசதி இருக்கிறது. கடந்தாண்டு ஜூலையில் ஃபோர்ட் நிறுவனத்தின் சென்னை ஆலை மூடப்பட்டது.MG நிறுவனத்தின் சில பங்குகளை வாங்கும் முயற்சியிலும் ஜிண்டால் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.போதிய வரவேற்பு இல்லை என்றும், உற்பத்திக்கு உகந்த சூழல் இல்லை என்றும் கூறி , சென்னை அருகே கார்கள் உற்பத்தியை ஃபோர்ட் நிறுவனம் கடந்தாண்டு நிறுத்தியது.
இதையடுத்து குறிப்பிட்ட ஆலையை மீண்டும் வேறு நிறுவனத்திடம் விற்க தமிழ்நாடு அரசு கடும் பாடுபட்டு வருகிறது. இந்த நிலையில் ஜே.எஸ்,டபிள்யூ நிறுவனம் முன்வந்துள்ளதால்,ஜிண்டால் நிறுவனத்துடன் டீல் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேச்சுவார்த்தைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதுடன் ,கிட்டத்தட்ட அனைத்து பணிகளும் முடியும் தருவாயில் இருப்பதாக கூறப்படுகிறது.