இந்த மூன்று வங்கிகளில் கணக்கு வைத்திருக்கிறீர்களா? உடனடியாக காசோலைகளை மாற்றவும்!
அலகாபாத் பேங்க், ஓரியண்டல் பாங்க் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவில் காசோலை வைத்திருப்பவர்கள் புதிய காசோலையை வாங்கிக் கொள்ள வேண்டும், ஏனெனில் அந்த வங்கிகளின் காசோலைகள் அக்டோபர் 1 முதல் செல்லாது. அலகாபாத் பேங்க் இந்தியன் பேங்க் உடன் இணைக்கப்பட்டதாலும் ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகள் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்பட்டதாலும் இம்மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
இதைப்பற்றி இந்தியன் பேங்க் ஒரு ட்வீட்டில் அலகாபாத் வங்கி வாடிக்கையாளர்கள் இந்தியன் வங்கி இடமிருந்து புதிய காசோலைகளை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியது. புதிய காசோலைகளை நீங்கள் நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மூலமாகவோ அல்லது உங்கள் வங்கிக் கிளைக்கே நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.
இதுபோல பஞ்சாப் நேஷனல் வங்கி ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்களை புதிய காசோலைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது. மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கியானது புதுப்பிக்கப்பட்ட IFSC மற்றும் MICR கொண்ட காசோலைகளை மட்டும் பயன்படுத்துமாறு அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்த மூன்று வங்கிகள் தவிர சிண்டிகேட் பேங்க் கனரா பேங்க் உடன் இணைக்கப்பட்டது. ஆந்திரா பேங்க் மற்றும் கார்ப்பரேஷன் வங்கி யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.