புது அமைப்பையே புதிதாக உருவாக்கிறது சீனா!!
நம் அண்டை நாடான சீனா, உலகிலேயே அனைத்து துறைகளிலும் முன்னோடியாக உள்ளது. அமெரிக்க டாலர் மூலம் உலகளவில் வர்த்தகம் நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்கா பெரிதாக தெரிந்தாலும் உண்மையில் பலதுறைகளில் வித்தகர்களாக திகழ்வது சீனா என்றால் அது மிகையல்ல. பாதுகாப்புத் துறையைத் தவிற மற்ற அனைத்து தரவுகளையும் உள்ளடக்கிய ஒரு புதிய நிதி ஒழுங்குமுறை அமைப்பை சீனா தயாரித்து வருகிறது. இது தொடர்பான தரவுகளை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஆளும் அரசு தயாரித்து வருகிறது. இந்த புதிய முறைப்படி தற்போது அமலில் உள்ள சீன வங்கிகள் மற்றும் காப்பீட்டு தரவுகள் கண்காணிக்கும் முறை முற்றாக ஒழிக்கப்படும். இந்த புதிய அமைப்பு செயல்பாட்டுக்கு வரும்பட்சத்தில் 5 விழுக்காடு அரசுப்பணியாளர்கள் பணி மிச்சமாகும். இதற்கு முன்பு இருந்ததை விட கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டு நிதிசார்ந்த அமைப்புகள் மற்றும் திட்டம் தீட்டும் அமைப்புகளை இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டமைப்பை நிர்வகிக்க தனியாக திறமையான குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளின் தரவுகளையும் சரிபார்த்து, ஸ்மார்ட் சிட்டி திட்ட தரவுகளையும் இந்த புதிய குழு கண்காணிக்கும்.